விரைவில் நிக்காஹ்: சிம்பு தம்பியை ஆசிர்வதித்த ரஜினிகாந்த்
சென்னை: டி. ராஜேந்தர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் அளித்துள்ளார்.
சிம்புவின் தம்பி குறளரசனுக்கும், நபீலா அகமது என்கிற பெண்ணுக்கும் வரும் 26ம் தேதி நிக்காஹ் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 29ம் தேதி ஐடிசி சோழா ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அப்பா டி. ராஜேந்தர் தனது இளைய மகன் குறளரசனை அழைத்துக் கொண்டு முக்கிய திரையுலக பிரபலங்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு சென்ற டி. ராஜேந்தர் தனது மகனின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ரஜினி குறளரசனை ஆசிர்வதித்ததுடன் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் அழைத்தார் டி. ராஜேந்தர். தம்பிக்கு திருமணம் என்பதில் அண்ணன் சிம்பு மகிழ்ச்சியாக உள்ளாராம். அவரும் திருமண வேலைகளை செய்து வருகிறாராம்.
கடந்த பிப்ரவரி மாதம் இஸ்லாத்திற்கு மாறிய குளரசன் ஒரு முஸ்லீம் பெண்ணை மணப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











