சகுனிகள் இருக்கும் சமுதாயத்தில் பிழைச்சிக்க முடியாது.. ரஜினி அதிரடி பேச்சு.. யாரை சொல்கிறார்?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்தில் ஃபகத் பாசில், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் நேற்று பிரமாண்டமாக படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த ஜெயிலர் படமும், கெஸ்ட் ரோலில் நடித்து லால் சலாம் படமும் கடைசியாக வெளியாகின. இவற்றில் ஜெயிலர் மெகா ஹிட்டானது. ஆனால் லால் சலாமோ வழுக்கி விழுந்துவிட்டது. இதற்கிடையே ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் ரஜினிகாந்த். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

vettaiyan vettaiyan audio launch rajinikanth

ஷூட்டிங் ஓவர்: வேட்டையன் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி, மும்பை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்துவந்தது. ரஜினிகாந்த்தும் முழு மூச்சுடன் அதில் நடித்துவந்தார். ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. நிச்சயம் இந்தப் படம் ரஜினிகாந்த்தின் கரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

கமர்ஷியல் வேட்டையன்: படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கின. ஃபகத் பாசில் உள்ளிட்டோர் தங்களுக்கான டப்பிங்கை பேசி முடித்தனர். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்குநர் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதனை பார்க்கையில் இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாகவும் உருவாகியிருப்பது உறுதியானது.

வேட்டையன் ரிலீஸ்: படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்தவர் ஞானவேல் என்பதால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படத்தின் டைட்டில் டீசரும் நல்ல வரவேற்பையே பெற்றது. படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

ஆடியோ ரிலீஸ்: இந்தச் சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த், ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். எப்படியும் இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்தின் பேச்சின் கண்டிப்பாக ரசிக்கும்படியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படியே அவர் பல விஷயங்களை பேசினார்.

சகுனிகளின் சமுதாயம்: அந்தவகையில் ஆடியோ லான்ச்சில் பேசிய அவர், "சகுனிகள் இருக்கின்ற இந்தச் சமுதாயத்தில் நல்லவனாக இருந்தால் பிழைத்துக்கொள்ள முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேண்டும்" என்று குறிப்பிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ரஜினிகாந்த் யாரை சகுனிகள் என்று சொல்கிறார். தனது தனிப்பட்ட பிரச்னையை மையப்படுத்தி இப்படி சொல்கிறாரா?.. இல்லை சினிமாவில் அவருக்கு பிரச்னை ஏற்படுத்துபவர்களை பற்றி இப்படி சொல்கிறாரா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X