சைலன்ஸ் ஓவர்.. TVK விஜய்க்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. ரசிகர்கள் ரியாக்ஷனைப் பாருங்க
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 2026 வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில் தவெக தலைமையிலான ஆட்சிதான் தமிழ்நாட்டில் என்று கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. இப்படி இருக்கையில் பலரும் தவெக தலைவர் விஜய்க்கும் அவரது கட்சியினருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கோலிவுட் நடிகர்கள் தொடங்கி, பாலிவுட் நடிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, " நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். " என்று தெரிவித்துள்ளார்.
ரியாக்ஷன்: இவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தலைவா நீங்க 1996ஆம் ஆண்டே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்றும், ஒரு வழியாக வாழ்த்து சொல்லிவிட்டார் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் ஒருவரோ, " வாரே வா, சூப்பர் ஸ்டார் பட்டம் எங்களுக்கு வேணாம், இப்ப அவர் உங்களுக்கே CM ஆகிட்டார், ஆனால் அவர் எப்போதும் உங்கள் ரசிகர் தான், உங்களை மதிபவர்" என்று பதிவிட்டுள்ளார்.

கமல்: ஏற்கனவே கமல்ஹாசன் தனது வாழ்த்துப் பதிவில், " தங்களுடைய முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையை பெற்று பெரு வெற்றி பெற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார்.
சூர்யா: அதேபோல் நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், " மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். திரைப் பிரபலங்களின் வாழ்த்து பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications