twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    50 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடத்தில் டப் செய்யப்படும் முதல் படம் கோச்சடையான்!

    By Shankar
    |

    50 ஆண்டு தடைக்குப் பிறகு முதல் முறையாக கன்னடத்தில் ஒரு படம் டப் செய்யப்படுகிறது. அதுதான் தமிழில் வெளியான ரஜினியின் கோச்சடையான்.

    கன்னட மொழி சினிமாவைப் பாதுகாக்க 1965-ம் ஆண்டு கன்னட திரைப்பட வர்த்தக சபை ஒரு சுய தடையை விதித்துக் கொண்டது. இனி பிற மொழிப் படங்களை கன்னடத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவதில்லை என்ற அந்தத் தடை 2015-ம் ஆண்டு வரை தீவிரமாகக் கடைப்படிக்கப்பட்டது.

    Rajinikanth breaks the 50 years long ban in Kannada Cinema

    குறிப்பாக பெரும் ஹாலிவுட் படங்கள் கூட கன்னடத்தில் டப் செய்வதை தடுத்து வைத்திருந்தனர்.

    50 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக இந்தத் தடை விலகுகிறது. முதல் படமாக ரஜினிகாந்த் நடித்து 2014-ல் 6 மொழிகளில் வெளியான கோச்சடையான் படம் கன்னடத்தில் டப் செய்யப்படுகிறது.

    கோச்சடையான் படம்தான் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்ப முறையில் தயாரான முதல் இந்தியப் படம். 2 டி மற்றும் 3டியில் தயாரான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, இந்தி மற்றும் போஜ்புரி மொழிகளில் வெளியானது.

    ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார். பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான கோச்சடையானுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் பிற மொழிகளில் இந்தப் படம் சரியாகப் போகவில்லை.

    இப்போது கன்னடத்தில் டப் செய்யப்படும் இந்தப் படம் எந்த மாதிரி வரவேற்பைப் பெறப் போகிறது என கன்னடத் திரையுலகம் ஆவலோடு காத்திருக்கிறது.

    இதுகுறித்து கன்னட டப்பிங் பிலிம்சேம்பர் தலைவர் கிருஷ்ண கவுடா கூறுகையில், "50 ஆண்டு டப்பிங் பட தடைக்குப் பிறகு வரும் முதல் படம் கோச்சடையான். இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகள் முடிந்துவிட்டன. இரண்டொரு நாளில் டப்பிங் தொடங்கிவிடும். பிப்ரவரி மாதம் இந்தப் படம் கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் வெளியாகும்," என்றார்.

    கோச்சடையான் கன்னட டப்பிங்குக்காக மட்டும் ரூ 50 லட்சம் செலவாகும் என கிருஷ்ண கவுடா தெரிவித்தார்.

    English summary
    Rajinikanth's 2014 release Kochadaiiyaan will be dubbed in Kannada for the first time since the Sandalwood's self ban on dubbing other language movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X