twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியை முதல்வராக்கியே தீரணும்.. ரசிகர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு யாகம்!

    |

    சென்னை: நடிகர் .ரஜினிகாந்த் 2021ல் முதல்வராக வேண்டி அவரது அண்ணன் சத்திய நாராயான ராவ் மற்றும் அவரது ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தியுள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டசபை தேர்தல்தலில் போட்டியிடப் போவதாக கடந்த 2017ஆம் ஆண்டு அறிவித்தார். 234 தொகுதிகளிலும் அவரது கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அறிவித்தார் ரஜினி.

    ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்தபோது ரஜினிகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் நியமனம், ரசிகர் மன்றம் பெயர் மாற்றம் என படுசூடாக வேலை நடந்துவந்தது.

    ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய் லட்சுமி #fridaymotivation

    கட்சி ஆரம்பிக்கவில்லை

    கட்சி ஆரம்பிக்கவில்லை

    ஆனால் தற்போது அதைப்பற்றிய பேச்சே இல்லை. இதுவரை ரஜினி கட்சியும் ஆரம்பிக்கவில்லை கட்சிப்பெயரையும் அறிவிக்கவில்லை. கட்சிக்கொடியையும் அறிமுகப்படுத்தவில்லை.

    இப்போதே ஆரம்பம்

    இப்போதே ஆரம்பம்

    2021ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை பல அரசியல் கட்சிகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன.

    படங்களில் கமிட்

    படங்களில் கமிட்

    ஆனால் இதுவரை அதற்கான பணிகளை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவில்லை. தொடர்ந்து புது புது படங்களில்தான் ரஜினிகாந்த் கமிட்டாகி வருகிறார்.

    முதல்வராக வேண்டி யாகம்

    முதல்வராக வேண்டி யாகம்

    இதனால் அவர் எப்போது கட்சித்தொடங்குவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில் 2021ஆம் ஆண்டு ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்வராக வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளது.

    சிதம்பரத்தில் யாகம்

    சிதம்பரத்தில் யாகம்

    ரஜினிகாந்த் 2021ல் முதல்வராக வேண்டியும் அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் மற்றும் ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.

    English summary
    Rajinikanth brother and fans did Special Pooja and yaham for Rajini to become Chief Minister of Tamilnadu on 2021.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X