Vijay: விஜய் அரசியலில் வெல்வது கஷ்டம்.. அடுத்த வருஷம் பாருங்க.. ரஜினிகாந்த் அண்ணன் பளிச் ..

ராமநாதபுரம்: நடிகர் விஜய் கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். கட்சி தொடங்கிய முதல் ஆண்டுக்குள்ளாகவே தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தினார். அடுத்த மாதம் அதாவது, ஆகஸ்ட் 25ஆம் தேதி, தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டினை நடத்தவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் அரசியலில் வெல்வது ரொம்பவும் கஷ்டம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணன், சத்ய நாராயண ராவ் தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்று அவர் கட்சி தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தகவல்கள் பரவி வந்தது. அவரது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை எல்லாம் நடத்தி, ஒரு வழியாக கட்சியைத் தொடங்கி விட்டார். இப்படி இருக்கும்போது அவர் எதிர்கொள்ளப் போகிற முதல் தேர்தலாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல் உள்ளது. இந்த தேர்தலை விஜய்யின் தவெக தனித்து எதிர்கொள்ளுமா, அல்லது கூட்டணி அமைத்து எதிர்கொள்ளுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

Rajinikanth Brother Sathya Narayana Rao Talks About Vijay s Political Success is Not Much Easy
Photo Credit:

சவால்கள்: ஏற்கனவே களத்தில் தேர்தல் மற்றும் ஆட்சி என இரண்டிலும் பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளாக திமுகவும், அதிமுகவும் உள்ளன. இதில், அதிமுக சார்பில் இப்போது இருந்தே பிரச்சாரத்தை அக்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி விட்டார். திமுகவும் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நடிகர் விஜய் தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டினை சிறப்பாக செய்ய அதிரடியாக வேலை பார்த்து வருகிறார்.

கூட்டணி நிலைப்பாடு: இது இப்படி இருக்க, விஜய் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளார் என்பது அவரது முதல் மாநாட்டு பேச்சைக் கேட்டதும் பலரும் தீர்மானித்து விட்டார்கள். விஜய் அதிமுக கூட்டணிக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அக் கட்சியில் பொறுப்பில் உள்ள ராஜ்மோகன் அதை மறுத்துவிட்டார்.

Rajinikanth Brother Sathya Narayana Rao Talks About Vijay s Political Success is Not Much Easy
Photo Credit:

விஜய் குறித்து: இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணன், சத்ய நாராயண ராவ், ராமநாதபுரம் முதுகளத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு, விஜய் அரசியலில் வெல்வது ரொம்ப கஷ்டம். அண்ணாமலைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவர் வெல்வார். அண்ணாமலை புத்திசாலி. திறமையாகவும் நேர்மையாகவும் வேலை பார்த்தவர். மக்கள் முடிவெடுப்பார்கள். அடுத்த ஆண்டு பாருங்கள்" என பதில் அளித்தார். இவரது இந்த பேச்சு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரஜினிகாந்த்தின் அண்ணனே கூறியிருப்பதால், இது ரஜினியின் கருத்தோ எனவும் சிலர் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X