ஒரு பிரயோஜனமும் இல்ல.. விஜய்யால் சாதிக்க முடியாது.. ரஜினியின் சகோதரர் பரபரப்பு பேட்டி!
சென்னை: நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இக்கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அதிரடியாக பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கியதால், எந்தப் பிரயோஜனமும் இல்லை என்றும், தமிழகத்தில் ஒன்னும் சாதிக்க முடியாது என்றும் ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், கையில் இருக்கும் படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுவேன், 2026 சட்டமன்றத் தேர்தல் இலக்கு அறிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த மாதம் விக்ரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் என்ன பேச போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அனைவரும் ஆடிப்போகும் அளவிற்கு அட்டகாசமாக பேசினார்.

அதிரடியான பேச்சு:அதில், குழந்தை முன்னாடி ஒரு பாம்பு வந்தா, அந்த குழந்தை அதைப்பார்த்து பயப்படாது, அதைப்பார்த்து சிரிக்கும். அதுபோலத்தான் அரசியலும் ஒரு பாம்பு அதைவைத்து விளையாடத்தான் நான் வந்து இருக்கேன். அரசியலுக்கு நாம குழந்தை தான், ஆனால் பாம்பா இருந்தாலும் பயம் இல்லை என்பது தான் எங்களுடைய கான்பிடன்ட். அரசியல் ஒன்றும் சினிமா இல்லையே கொஞ்சம் உஷாராகத்தான் இருக்கணும் என்று, தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் கொள்கை குறித்து பேசினார். விஜய் பேச்சு சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.
விஜய்யால் ஜெயிக்க முடியாது: இந்நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயண ராவிடம் செய்தியாளர்கள் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசினார்கள். விஜய் கட்சி தொடங்கியதில் எந்த பிரயோஜனமும் இல்லை, தமிழகத்தில் எதுவும் சாதிக்க முடியாது, வந்து இருக்கிறார் முயற்சி செய்து பார்க்கட்டும் என்றார். தொடர்ந்த பேசிய அவர், அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உள்ளது. அரசியல் ஆசை விஜய்க்கு உள்ளதால், கட்சி தொடங்கி உள்ளார், வந்தபின் என்ன செய்ய போகிறார் என்பது தெரியாது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அவரின் செயல்பாடுகளை எப்படி இருக்கிறது என்று பார்ககலாம் ஆனால், தமிழ்நாட்டில் விஜயால் ஜெயிக்க முடியாது. அது கஷ்டம் என்று சத்திய நாராயண ராவ் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











