ஃபென்டாஸ்டிக், தூள் கிளப்பிட்டீங்க: விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து பாராட்டிய ரஜினி
சென்னை: ராட்சசன் பட ஹீரோவான விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் விஷ்ணு விஷாலுக்கு போன் செய்து பேசியுள்ளார்.
விஷ்ணு விஷால்
சூப்பர் ஸ்டார் போன் செய்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளார் விஷ்ணு விஷால். ஃபென்டாஸ்டிக், நடிப்பு தூள் கிளப்பிட்டீங்க, போலீஸ் உடையில் செம ஃபிட், வில்லன் யாரு? சூப்பர் பாடி லாங்குவேஜ், இயக்குனர் மற்றும் உங்கள் காம்போ சூப்பர் என்று ரஜினி கூறியதாக ட்வீட்டியுள்ளார் விஷ்ணு விஷால்.
ராம்குமார்
ரஜினி விஷ்ணு விஷாலுக்கு மட்டும் அல்ல ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமாருக்கும் போன் செய்து வாழ்த்தியுள்ளார். அடுத்ததாக ராம்குமார் ரஜினியின் மருமகனான தனுஷை வைத்து படம் எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்
படம், அரசியல், குடும்பம் என்று பிசியாக இருந்தாலும் நல்ல படங்களை பாராட்ட தவற மாட்டார் ரஜினி என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.
யாருப்பா அது?
ரஜினி கேட்டதை தான் நாங்களும் கேட்கிறோம், அந்த வில்லன் யாரு?


Click it and Unblock the Notifications











