தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. வாக்களிக்க வந்த ரஜினி .. காஸ்ட்யூமிலேயே யாருக்கு சப்போர்ட்னு சொல்லிட்டாரே

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்று வருகிறது. மொத்தம் 33 பொறுப்புகளுக்கு 100 பேர் போட்டியிடுகிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களின் பதவி காலம் வருகிற ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இதனால் இதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் வாக்களிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாக்களிக்க வந்தார். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவாக வாக்களிக்கப்போகிறார் என்ற ஆவல் பலருக்கும் இருந்தது.

இந்த ஆவல் ஏற்படக் காரணம், தமிழ்நாட்டிற்கு வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அரசியல் களத்தில் முழு முனைப்புடன் போட்டியிடும் கட்சிகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் இந்த போட்டியில் போட்டியிடுவதால், இந்த தேர்தலை திரைத்துறை வட்டாரத்தில் கிட்டத்தட்ட அரசியல் தேர்தலைப் போல பார்க்கின்றனர். இப்படி இருக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவாக வாக்களிக்கப்போகிறார் என்ற கேள்வி பலருக்கும் இருந்த நிலையில், வாக்களிக்க வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க வெள்ளை நிற உடையில் வந்து, தான் யாருக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாக காட்டாமல், அரசியலை தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் உள்ளீடு செய்ய வேண்டாம் என்று சிம்பாளிக்காவாக கூறுகிறார் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Rajinikanth Came To Vote Cinema Producers Council Election Video Goes Trending

33 பதவிகள்: அதேபோல் தமிழ் சினிமாவில் மூத்த தயாரிப்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் கலந்து கொண்டு வாக்களித்து வருகிறார்கள். மொத்தம் ஒரு தலைவர், இரண்டு துணைத் தலைவர், இரண்டு செயலாளர்கள், ஒரு பொருளாளர், ஒரு இணைச் செயலாளர், 26 செயற்குழு உறுப்ப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் ராம நாராயணன் அணி என்று ஒரு அணியும் நலம் காக்கும் அணி என்று ஒரு அணியும் என மொத்தம் இரண்டு அணிகள் போட்டியிட்டுள்ளது.

வாக்குகளும் முடிவுகளும்: மொத்தம் 1, 524 பேருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. இந்தத் தேர்தலை ஓய்வு பெற்ற நீதியரசர் ராஜேஸ்வரன் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் தேர்தல் காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 6 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, இன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X