ரஜினியால் படத்தில் மட்டுமே முதல்வர் ஆக முடியும்: சொல்கிறார்கள் ஒன்இந்தியா வாசகர்கள்

By Siva

சென்னை: ரஜினிகாந்த் படத்தில் மட்டுமே முதல்வர் ஆக முடியும் என்று ஒன்இந்தியா வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ரஜினிக்காக சூப்பரான அரசியல் கதையை தயார் செய்து வைத்துள்ளாராம் முருகதாஸ்.

படத்தில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர் ஆகிறாராம்.

கருத்துகணிப்பு

கருத்துகணிப்பு

ரஜினி கட்சி துவங்கும் முன்பே படத்தில் முதல்வராவது குறித்து ஒன்இந்தியா இணையதளத்தில் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. ரஜினி முதல்வராவது எல்லாம் படத்தில் மட்டுமே நடக்கும் என்று 60 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

கட்சி

கட்சி

ரஜினி ரீலில் முதல்வர் ஆவது சிறப்பு என்று 19 சதவீதம் பேரும், முதலில் அவர் கட்சி துவங்கட்டும் பார்க்கலாம் என்று 20 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்பீடு

ஸ்பீடு

ரஜினி என்றாலே ஸ்பீடு என்று அர்த்தம். எதையும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வேகமாக செய்து முடிப்பார். அப்படிப்பட்ட மனிதர் கட்சி துவங்குகிறேன் என்று அறிவித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஒன்றும் செய்யாமல் இருப்பது தான் பலருக்கும் ஏமாற்றம் அளிக்கிறது.

வருவாரா?

வருவாரா?

ரஜினி முதல்வர் ஆனால் தமிழகத்தையே அமெரிக்கா போன்று மாற்றிவிடுவார் என்று நம்புகிறார்கள் அவரின் ரசிகர்கள். ஆனால் அவர் அரசியலுக்கு நிஜமாகவே வருவாரா என்ற சந்தேகம் பலருக்கும் எழத் துவங்கிவிட்டது. அவர் தொடர்ந்து புதுப் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதும் இந்த சந்தேகத்திற்கு காரணம். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் வருவது தான் அவர் ஸ்டைல். வருவார் வர வேண்டிய நேரத்தில் நிச்சயம் வருவார் என்று நம்புவோமாக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X