»   »  ரஜினிக்கு நடிக்கத் தெரியாது: ஸ்ரீதேவியின் ரீல் கணவர்

ரஜினிக்கு நடிக்கத் தெரியாது: ஸ்ரீதேவியின் ரீல் கணவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி மிகவும் உண்மையானவர். அவருக்கு போலியாக நடிக்கத் தெரியாது என பாலிவுட் நடிகர் ஆதில் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அவருக்கு கணவராக நடித்தவர் பாலிவுட் நடிகர் ஆதில் ஹுசைன். மேலும் பார்ச்ட் படத்தில் ராதிகா ஆப்தேவுடன் படுக்கையறை காட்சிகளில் நடித்தவரும் இவரே.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் ரஜினி பற்றி கூறுகையில்,

ரஜினி

ரஜினி

கொஞ்சமும் தலைக்கனம் இல்லாத சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் பெரிய ஸ்டாராக இருந்தும் எங்களை எல்லாம் சமமாக பார்க்கிறார், நடத்துகிறார்.

வாட் எ மேன்

வாட் எ மேன்

ரஜினி மாதிரி ஒருவரை பார்க்க முடியாது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை திரையில் பூர்த்தி செய்கிறார். நிஜ வாழ்வில் மிகவும் எளிமையாக உள்ளார். இப்படி இருந்தால் மக்களுக்கு ஏன் அவரை பிடிக்காமல் போகும்?

அன்பு

அன்பு

படப்பிடிப்பின்போது நான் எப்பொழுது எல்லாம் அவருடன் சேர்ந்து அமர்ந்தாலும் பாசத்தோடு என் கையை தொட்டு தட்டிக் கொடுப்பார். அவர் மிகவும் அன்பானவர்.

நடிக்கத் தெரியாது

நடிக்கத் தெரியாது

ரஜினி மிகவும் உண்மையானவர். அவருக்கு போலியாக நடிக்கத் தெரியாது. அத்தகைய நபருடன் பணியாற்ற கொடுத்து வைத்திருக்க வேண்டும் என ஆதில் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor Adil Hussain who is sharing screen space with Rajinikanth in 2.0 says that superstar is genuine and can't fake it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil