ரஜினிகாந்த் பிறந்தநாள்.. டிரெண்டாகும் ஹேஷ்டேக்குகள்.. வாழ்த்துகளை குவிக்கும் சினிமா பிரபலங்கள்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
Recommended Video
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், தனது 70-வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார்.
இதையடுத்து அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நள்ளிரவில் கொண்டாட்டம்
அவர் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் இந்த பிறந்த நாளை ரசிகர்கள் மற்றும் அவருடைய மன்ற நிர்வாகிகள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன் ரசிகர்கள் பலர், நள்ளிரவில் குவிந்தனர். அங்கேயே கேக் வெட்டி, ரஜினியின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

காமன் டிபி
திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் பிறந்த நாளுக்காக, சிறப்பு காமன் டிபி சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். இயக்குனர் லிங்குசாமி, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ராஷ்மிகா மந்தனா உட்பட பல பிரபலங்கள் வெளியிட்டனர்.

அரசியல் என்ட்ரி
ஆரம்ப காலம் முதல் பாட்ஷா, படையப்பா, தர்பார் என அவர் நடித்த பல சினிமா படங்களின் புகைப்படங்களுடன் ரஜினியின் அரசியல் என்ட்ரி வரை பல்வேறு விஷயங்கள் இந்த காமன் டிபியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் #HappyBirthdayRajinikanth மற்றும் #Annaatthe ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி இருக்கிறது.

ராதிகா சரத்குமார்
அவர் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் இந்த ஹேஷ்டேக்கில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்த போட்டோவை வெளியிட்டு, நடிகர் விவேக் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நடிகை
ராதிகா சரத்குமார், பிரசன்னா, விக்ரம் பிரபு, ஹரீஷ் கல்யாண், இசை அமைப்பாளர் டி.இமான் உட்பட சினிமா பிரபலங்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











