சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.. அது இவர் மட்டும்தாங்க!

Recommended Video

Rajinikanth birthday 2019 | Rajinikanth 70th birthday | Evolution of rajini

சென்னை: ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக 44வருடங்கள் நீடித்து வருகிறார். இவர் இதுவரை 166 படங்களில் நடித்து இருக்கிறார்.

முப்பரிமானங்களின் ஒரே நடிகர் என்ற பெருமையும் இவருக்கு இருக்கிறது .இவர் கருப்புவெள்ளை படம் ,ஈஸ்ட்மென்,கலர் படம் ,அனிமேஷன் மற்றும் 3டி படமென அனைத்து விதமான படங்களிலும் நடித்து விட்டார் .

rajinikanth celebrates his birthday

இன்றுள்ள இளைய தலைமுறைக்கும் போட்டி கொடுக்கும் வகையில் வெற்றி நடை போட்டு வருபவர் ரஜினி மட்டுமே. அவரது பேட்ட பட வசூலே இதற்கு நல்ல சான்று.

கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் யாரும் எதிர்பாராத வசூல் செய்தது. ரஜினி படங்களில் வசூல் இல்லை என்று சொன்னவர்களின் வாய் அடைக்கும் அளவிற்கு அந்த படத்தின் வசூல் இருந்தது.

கிட்டதட்ட 155கோடியில் தயாரிக்கபட்ட இந்த படம் 218கோடியே 50லட்சம் வரை படம் ரிலீஸ்க்கு முன்பே பிஸ்னஸ் செய்து ஆச்சரியத்தில் அசத்தியது. ஏனெனில் ரஜினியை தவிர எந்த நடிகர்களின் படமும் இதுவரை 200கோடி அளவில் பிஸ்னஸ் செய்தது கிடையவே கிடையாது .

இந்த நிகழ்வு சொல்வது ரஜினிதான் தமிழ் சினிமாவின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி. அவரை யாராலும் தொட முடியவில்லை என்பதே உன்மை. தனது 69வது பிறந்த நாளை கொண்டாடும் ரஜினி மெம்மேலும் நல்ல தரமான படங்களையும் மிகபெரிய வசூல் மிக்க படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்க படுகிறது .

rajinikanth celebrates his birthday

ரஜினி அடுத்தாக ஏ.ஆர்.முருகதாஸ் இயகத்தில் தர்பார் படத்தில் நடித்து இருக்கிறார் .இந்த படத்தின் இசை வெளியிடபட்டுவிட்டது .படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு கூறியிருக்கிறது .இதற்கடுத்து ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார் . இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் .ரஜினியின் இந்த படத்திற்கு முதல்முறையாக டீ.இம்மான் இசையமைக்கிறார் .ரஜினி தொடர்ந்து இளைஞர்களுடன் பணியாற்றி வருவது சினிமாவில் அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது ,பலரும் இதனால் தான் இவர் சூப்பர் ஸ்டார் என்று கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X