சிங்கம் சிங்கிள்னு இனியும் சுத்திட்டு இருந்தா.. பழைய நிலைமை தான்.. சூப்பரா ரூட்டை மாத்திய ரஜினி!

சென்னை: Rajinikanth - தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முத்து, பாட்ஷா, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி, எந்திரன் என சிங்கிள் சிங்கமாக ஏகப்பட்ட ஹிண்டஸ்ட்ரி ஹிட்களை கொடுத்து வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி, காலா, தர்பார், அண்ணாத்த என தொடர்ந்து சரிவை சந்திக்க அரம்பித்த நிலையில், ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் ஜெட் வேகத்தில் தனது பாக்ஸ் ஆபிஸ் பலத்தை கோலிவுட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் நிரூபித்துள்ளார்.

மல்டி ஸ்டார் கான்செப்ட் அந்த காலத்தில் இருந்தே இந்திய சினிமாவில் இருந்து வந்தாலும், சில ஆண்டுகளாக நடிகர்கள் சோலோ சிங்கங்களாகவே நடித்து வந்தனர்.

Rajinikanth completely changed his route into Multi Starrer for these reasons?

கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படம் அதற்கு மிகப்பெரிய பாலமாக அமைந்து மற்ற மொழி நடிகர்களையும் முன்னணி நடிகர்களையும் ஒரே படத்திற்குள் கொண்டு வந்து ரசிகர்களின் என்டர்டெயின்மென்ட்டை பல மடங்காக உயர்த்தி வசூல் வேட்டையும் நடத்தின.

சிங்கிள் சிங்கம்: கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும்.. சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்திலேயே எந்தவொரு டாப் ஹீரோக்களையும் துணைக்கு அழைத்துக் கொள்ளாமல் அதிரடிதான் மச்சான் மச்சன் என்றானே என உச்சம் தொட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது மைண்டை மொத்தமாக மாற்றி விட்டார் என்றே தெரிகிறது.

பீஸ்ட் படம் ஃபிளாப் ஆன நிலையிலும், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த ரஜினிகாந்த் துணைக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோரை படத்தில் துணைக்கு அழைத்துக் கொண்டு கேமியோ மூலமே ஹைப்பை எகிற வைத்து கல்லா கட்டினார்.

Rajinikanth completely changed his route into Multi Starrer for these reasons?

மல்டி ஸ்டாரர் ரூட்டு: ஜெயிலர் திரைப்படத்திற்கு மட்டும் தான் அப்படி இருக்கும் என பார்த்த ரசிகர்களுக்கு தலைவர் 170 படத்தில் பாலிவுட்டில் இருந்து அமிதாப் பச்சன், டோலிவுட்டில் இருந்து ராணா டகுபதி, மலையாளத்தில் பகத் ஃபாசில், மஞ்சு வாரியர் என மீண்டும் பான் இந்தியா நடிகர்களை ஒன்றிணைத்த நிலையில், வெற்றி ஃபார்முலாவை சூப்பர்ஸ்டார் பிடித்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறார் எனக் கூற ஆரம்பித்துள்ளனர்.

குறைந்த கால்ஷீட்: மேலும், 72 வயதை கடந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மொத்த படத்தையும் இனிமேலும் தன்னுடைய தோள்களில் தூக்கி சுமக்க முடியாது என்றும் அதன் காரணமாகவே மற்ற நடிகர்களுக்கு சரியான ஸ்கோப் கொடுத்து படங்களை உருவாக்கி பட்டையை கிளப்ப பக்காவாக ஸ்கெட்ச் போட்டுள்ளார் என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

தலைவர் 171: தலைவர் 170 படத்திலேயே இப்படி நட்சத்திர பட்டாளம் இருக்கும் பட்சத்தில் தலைவர் 171 லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ் படமாக இருக்குமா? அல்லது தனிப்படமாக உருவானால் மேலும், பல முன்னணி நடிகர்கள் அந்த படத்தில் பங்கேற்பார்களே என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X