Rajinikanth 50: 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி.. பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை: லோகேஷ்கனக ராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. அதில், நாகார்ஜுனா, சத்யராஜ், அமீர்கான், ஸ்ருதிஹாசன் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியிருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இன்று படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தின் வழியாக நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
அதே நேரம் நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இப்படம் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி வெளியானது. இதன் மூலம் ரஜினிகாந்த் சினிமாவில் நுழைந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை, ரசிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் பார்த்திபன்: அந்த வகையில் நடிகர் பார்த்திபன் இணையத்தின் வழியாக வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு, ரஜினி சாரின் ரசிகரான பார்த்திபனின் பணிவான வணக்கம். ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் நுழைந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். சினிமாவில் ஆறு மாதமோ, 100 மாதமோ தாக்குப் பிடிப்பதே மிகவும் சிரமமானது. ஆனால், ரஜினி அவர்கள் 600 மாதங்கள், 50 ஆண்டு நிறைவு செய்திருக்கிறார். இந்த 50 ஆண்டுகளில் அவரின் வெற்றிப் படங்கள் மிக மிக அதிகம். பல இளம் இயக்குனர்கள் சினிமாவிற்கு வந்த பிறகும் கூட, அவரின் புகழ் மென்மேலும் ஓங்கி வளர்கிறது. ரஜினியின் வாக்குப்படி இது கடவுளின் ஆசிர்வாதம். ஆனால், நான் ரசிகர்களின் ஆசிர்வாதம் என்று சொல்லுவேன். இந்த மங்காத புகழுக்கு பின்னால் இருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் என வீடியோ வெளியிட்டு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்

வெற்றி பெற வாழ்த்துகிறேன்: நடிகரும் மாநிலங்களை எம்பியுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சினிமாவின் அரை நூற்றாண்டைக் குறிக்கும் என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று திரையுலகில் 50 ஆண்டுகளை கொண்டாடுகிறார். சூப்பர் ஸ்டாரை அன்புடனும் போற்றுதலுடனும் கொண்டாடுகிறேன், மேலும் இந்த பொன்விழாவிற்கு ஏற்றவாறு கூலி உலகளவில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
அதேபோல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், அவர்களும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஒன்றாம் வகுப்பில் என்னுடைய நோட்டு புத்தகங்கள் உங்களுக்காக நான் வரைந்த படங்களால் நிரம்பு இருந்தன இப்போது என் லேப்டாப் உங்களுக்காக நான் எழுதிய திரைகதையால் நிரம்பியுள்ளது எனக்கு நீங்க வேற தலைவா சினிமாவில் நீங்க வந்ததுக்கு நன்றி இந்த 50 வருடம் போலவே இன்னும் பல வருடங்கள் வரவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்தநிலைக்கு காரணம் உங்களின் அர்ப்பணிப்பு தான். சினிமாவில் உங்களைப் போன்ற ஒரு நட்சத்திரம் இதற்கு முன்பும், அதற்குப் பிறகும் இருந்ததில்லை. உங்களைக் கொண்டாடுவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











