twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குழந்தை சுஜீத்தின் ஆன்மா சாந்தியடையட்டும்.. ரஜினிகாந்த் இரங்கல்

    சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல்

    |

    Recommended Video

    சம்பவ இடத்திற்கு சென்று நடிகர் விமல் உருக்கம்!

    சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்து 4 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த குழந்தை சுஜித்தின் மரணத்தால் மனம் வாடியுள்ள நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருச்சி அருகே ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த குழந்தை சுஜித் 80 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.

    Rajinikanth condolence for child Sujith demise

    குழந்தை சுஜித்தின் மரண செய்தியை அறிந்த பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் சமூகவலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    மலரும் முன்னே கசங்கிப் போன பிஞ்சு மொட்டு.. சுஜித் மரணத்தால் கலங்கும் தமிழ் திரையுலகம்!மலரும் முன்னே கசங்கிப் போன பிஞ்சு மொட்டு.. சுஜித் மரணத்தால் கலங்கும் தமிழ் திரையுலகம்!

    நடிகர் ரஜினிகாந்த், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், "சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" என பதிவிட்டுள்ளார்.

    சற்று நேரத்திற்கு முன்னர், செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், சுஜித் மரணம் என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாது, எது நடக்கக் கூடாது என அனைவரும் நினைத்து இருந்தோமோ அது நடந்து விட்டது. சுஜித்தின் நிலை குறித்து ரஜினிகாந்த் தன்னிடம் கேட்டவாறே இருந்தார் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

    இந்நிலையில், தற்போது, நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், குழந்தை சுஜித்தின் மரணம் குறித்து ஆழ்ந்த இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

    தர்பார் பட ஷூட்டிங்கில் இருப்பதால், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என தெரிகிறது.

    English summary
    Actor Rajinikanth put Rip post for his official twitter handle for the Child Sujith demise after a long 80 hours struggle in borewell.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X