முதல் ரசிகர் மன்றம் அமைத்த முத்துமணி மரணம்.. போனில் ரசிகரின் மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு முதல் முறையாக ரசிகர் மன்றம் அமைத்தவர் மதுரையை சேர்ந்த முத்துமணி என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

சமீபத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த முத்துமணி சிகிச்சை பலனளிக்காமல் உயிரி இழந்தார்.

இந்நிலையில், முத்துமணியின் மனைவிக்கு போன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறிய ஆடியோ ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ரசிகர் மன்றம்

ரசிகர் மன்றம்

நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக இருந்து ஹீரோவான நிலையில், அவருக்கு முதல் முதலாக மதுரையில் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்தவர் முத்துமணி என்பவர்தான். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான அவர் மீது ரஜினிகாந்துக்கு எப்போதுமே தனி அக்கறை உண்டு. ரஜினிகாந்தின் பல விழா மேடைகளிலும் முத்துமணி தவறாமல் கலந்து கொள்வார்.

ரஜினிகாந்த் வீட்டில் திருமணம்

ரஜினிகாந்த் வீட்டில் திருமணம்

ரஜினிகாந்தின் ரசிகர் முத்துமணி தனது திருமணத்தையே நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் உள்ள பூஜை அறையின் முன்பு தான் செய்து கொண்டார். அந்த அளவுக்கு ரஜினிகாந்த் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர். இந்நிலையில், சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் முத்துமணி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு போன் செய்து ஆறுதல் கூறியிருந்தார் ரஜினி.

ரசிகர் மரணம்

ரசிகர் மரணம்

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இருந்த வந்த முத்துமணி சமீபத்தில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை ரஜினி ரசிகர் மன்ற ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முத்துமணியின் மனைவிக்கு போன் செய்து ஆறுதல் கூறியுள்ள ஆடியோ வைரலாகி வருகிறது.

ஆறுதல் சொன்ன ரஜினி

ஆறுதல் சொன்ன ரஜினி

ரஜினிகாந்தின் ரசிகர் முத்துமணியின் மனைவி லட்சுமியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் தனக்கு கடந்த 5 நாட்களாக உடல் நலம் சரியில்லை என்றும், விரைவில் நேரில் வந்து பார்ப்பதாகவும், நீங்கள் சென்னைக்கு வந்தாலும் வீட்டிற்கு வாங்க என்றும் கூறினார். ரசிகர் முத்துமணியின் மறைவு தனக்கு மிகுந்த மன வேதனையை கொடுத்ததாகவும் இரங்கல் தெரிவித்தார்.

மகளின் எதிர்காலம்

மகளின் எதிர்காலம்

போனில் ரஜினிகாந்துடன் பேசிய முத்துமணியின் மனைவி லட்சுமி, தனது மகள் 10வது படித்து வருவதாக கூறிய நிலையில், அதைப்பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்மா.. பொண்ணை நல்லா படிக்க சொல்லுங்க.. மற்றதை நான் பார்த்துக்குறேன் என முத்துமணியின் மகளின் எதிர்காலத்திற்கு உதவுதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X