twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விசு மறைவு.. அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர்.. என் மனதை மிகவும் பாதித்துள்ளது.. ரஜினி இரங்கல்

    |

    சென்னை: நடிகரும் இயக்குநருமான விசு அவர்களின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Actor Visu Passed Away | நடிகர் விசு உடல் நலக் குறைவால் காலமானார்

    நடிகரும் இயக்குநருமான விசு நேற்று மாலை காலமானார். 75 வயதான விசு சிறு நீரகக்கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    விசு இயக்குனர், நடிகர், வசன கர்த்தா, கதாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர். ஆரம்பத்தில் இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றினார்.

    பல படங்கள்

    பல படங்கள்

    கண்மணி பூங்கா என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மணல் கயிறு, டவுரி கல்யாணம், அவள் சுமங்கலிதான், கெட்டி மேளம், சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம், காவலன் என் கோவலன், பெண்மணி அவள் கண்மணி, திருமதி ஒரு வெகுமதி, வா மகளே வா, மீண்டும் சாவித்திரி உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.

    அம்மையப்பன்

    அம்மையப்பன்

    இதில் ‘சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். அந்தப் படத்தில் அவரது அம்மையப்பன் கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.1986 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சிறந்த சமூக குடும்ப படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெள்ளி விழா கண்டது. சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம்.

    திரைக்கதை

    திரைக்கதை

    இதுபோல் விசு நடித்து இயக்கி 1992-ல் வெளியான ‘நீங்க நல்லா இருக்கணும்' படத்துக்கும் தேசிய விருது கிடைத்தது. சிவகுமார் நடித்த அவன் அவள் அது, ரஜினிகாந்தின் தில்லுமுல்லு, நெற்றிக்கண், புதுக்கவிதை, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத் உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.

    மறைவு அதிர்ச்சி

    மறைவு அதிர்ச்சி

    தில்லுமுல்லு, குடும்பம் ஒரு கதம்பம், புதிய சகாப்தம், மெல்ல திறந்தது கதவு, மன்னன், வனஜா கிரிஜா, வா மகளே வா, அருணாசலம், சின்ன மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தனது படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை அமைத்தார் விசு.
    அவரது மறைவு தமிழ் திரைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    ரஜினி இரங்கல்

    அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Rajinikanth condoles for Visu Demise. Actor director Visu is No more. He has died yesterday due to kidney problem.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X