ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ட்விட்டரில் வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் !
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து தயாரித்துள்ள 99 சாங்ஸ் திரைப்படம் வெற்றி பெற ரஜினிகாந்த் ஏஆர் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி உள்ளது.
ஜியோ ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்டுடன் இணைந்து தயாரித்துள்ளது.

எடில்ஸி வர்காஸ்
ரஹ்மானின் முதல் தயாரிப்பான இந்த படத்தில் தி தேவாரிஸ்ட்ஸ் மற்றும் பிரிங் ஆன் தி நைட் புகழ் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்குகிறார். 99 சாங்ஸ் திரைப்படத்தின் மூலம் ஏஹன் பட்டை ரஹ்மான் நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக எடில்ஸி வர்காஸ் நடிக்கிறார்.

100 பாடல் எழுதுகிறான்
ஒரு நாள் விமானத்தில் வந்த போது தான் எனக்கு இந்த கதை யோசனை வந்தது என்றும், ஒரு பெண்ணை ஒரு ஆண் உயிருக்கு மேலா காதலிக்கிறான். அந்த பெண்ணை நினைத்து அவன் 100 பாடல்களை எழுதுகிறான் இது தான் கதை என்று அண்மையில் ஒரு பேட்டியில் ஏ.ஆர் ரஹ்மான் கூறியிருந்தார்.

14 பாடல்களும் ஹிட்
இசையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தை விவ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். எடில்ஸி,இஹான், மனீஷா கொய்ராலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம் பெற்றுள்ள 14 பாடல்களும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் வாழ்த்து
99 சாங்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது. பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த்
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 99 சாங்ஸ் படத்தின் போஸ்டரை பகிர்ந்து, 99 சாங்ஸ் படத்தின் வெளியீட்டிற்காக வாழ்த்துகள் ஏ.ஆர்.ரஹ்மான். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











