கடவுள் ஆசிர்வதிக்கட்டும்... அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி.. ஜெயிலர் 2 செம சர்ப்ரைஸ்
சென்னை: குட் பேட் அக்லி படம் இன்று வெளியான நிலையில் திரை பிரபலங்கள் பலரும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில, நடிகர் அஜித் குறித்து ரஜினி கூறியிருப்பதை அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதில், ஜெயிலர் 2 படம் குறித்த அப்டேட்டையும் தெரிவித்திருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தை புகழ்ந்து பேசி வருகின்றனர். இந்நிலையில், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தனது சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோன்று நடிகை த்ரிஷா நாளை தியேட்டரில் கொண்டாட்டத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

வெங்கட் பிரபு வாழ்த்து: கோட் படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்து இயக்குநர் வெங்கட்பிரபு எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு அஜித், த்ரிஷாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து குட் பேட் அக்லி மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். அஜித் அண்ணனை தியேட்டரில் கொண்டாட ரசிகர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு அஜித் ரசிகர்கள் மங்காத்தா பார்ட் 2 எப்போது என வெங்கட்பிரபுவிடம் கேட்டுள்ளனர்.
குட் பேட் அக்லி எப்படி இருக்கு?: அஜித்தின் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. குறிப்பாக அர்ஜூன் தாஸ் நடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. மேலும், அதில் அர்ஜூன் தாஸ் டபுள் ஆக்சன் கேரக்டரில் நடித்திருக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. திரையரங்கில் படத்தை பார்த்த ரசிகர்கள் இதனை வெளியிட்டுள்ளனர். படத்தின் சில க்ளைமாக்ஸ் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
ஓல்டு இஸ் கோல்டு: குட் பேட் அக்லி படத்தில் ஒத்த ரூபா தாரேன் பாடல் வைப் மோடாக மாறியிருக்கிறது. அதேபோன்று வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலும் இப்படத்தில் இடம்பிடித்திருக்கின்றன. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த மிகப்பெரிய ஹிட் பாடலான தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலும் குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படத்தில் நடிகை சிம்ரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். சிம்ரன் வரும் காட்சிகளும் தியேட்டரில் விசில் சத்தங்கள் பறக்கின்றன.

அஜித்தை வாழ்த்திய ரஜினி: இன்று காலை கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெய்லர் பார்ட் 2 திரைப்படம் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. குமரி அனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதி நல்ல மனிதர் அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். பின்பு, ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது என கூறியுள்ளார். மேலும்,
\அஜித் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி உள்ளது அது குறித்து கேட்டபோது வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ என தெரிவித்து கோயம்புத்தூர் புறப்பட்டு சென்றார்.


Click it and Unblock the Notifications











