பேரும் புகழும் பெற வேண்டும்… முக ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து !
சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளதற்காக திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி உள்ளது.

திமுக கூட்டணி முன்னிலை
தமிழ்நாடு 234 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து ஒவ்வொரு தொகுதியாக வெற்றி அறிவிக்கப்பட்டு வருகின்றன.

10 ஆண்டுகளுக்கு பிறகு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

வாழ்த்து
இதனையடுத்து மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

மனமார வாழ்த்துக்கள்
இதே போன்று நடிகர் ரஜினியும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்ற பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன், இவ்வாறு ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











