3 நாட்களில் 11 கோடி ரூபாய் வசூல்.. வித் லவ் படக்குழுவை நேரில் சந்தித்த ரஜினிகாந்த்.. மகள் உருக்கம்

சென்னை: ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தயாரிப்பில் மதன் இயக்கத்தில் உருவான வித் லவ் படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்தார். மலையாள நடிகை அனஸ்வரா ஹீரோயினாக நடித்தார். சில நாட்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மூன்று நாட்களில் மொத்தம் 11 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார் ரஜினிகாந்த்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக அவர் என்ன படம் இயக்குவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில்; ஹீரோவாக நடிக்க கமிட்டானார். மதன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கிய வித் லவ் படத்தில்தான் அவர் ஹீரோவாக நடித்தார். மலையாள நடிகை அனஸ்வரா ஹீரோயினாக நடித்தார். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

ரஜினி மகள் தயாரிப்பு: இந்தப் படத்தை ரஜினிகாந்த்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். ஏற்கனவே அவர் கோவா படத்தை தயாரித்திருந்தார். அதனையடுத்து கோச்சடையான், விஐபி 2 ஆகிய படங்களை இயக்கினார். அதற்கு பிறகு சினிமாவில் பெரிதாக இயங்காமல் இருந்த அவர் இப்போது இப்படத்தை தயாரித்திருக்கிறார். எனவே படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

Rajinikanth Congratulates With Love Team After 11 Crore Box Office Collection
Photo Credit:

படம் சூப்பர் டூப்பர் ஹிட்: காதல் ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படம் அனைவரையும் கவர்ந்துவிட்டது. சாதாரண கதைதான் என்றாலும் திரைக்கதை, இசை என மற்ற விஷயங்களில் படம் அருமையாக இருந்தது. முக்கியமாக ஃபீல் குட் படமாக இது அமைந்துவிட்டது என ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்தார்கள். எனவே படமானது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வசூலிலும் செம: விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் படம் சக்கைப்போடு போட்டது. படம் வெளியாகி மூன்று நாட்களில் மொத்தம் 11 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டது. பிரதீப் ரங்கநாதன் எப்படி இயக்குநராக இருந்து ஹீரோவாக மாறி வரிசையாக வசூல் ரீதியாக வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தாரோ அதேபோல் அபிஷனும் கொடுப்பார் என்ற நம்பிக்கையை திரைத்துறையினர் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேரில் சந்தித்த ரஜினி: இந்நிலையில் வித் லவ் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை நேரில் தனது வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் வந்திருந்த ஒவ்வொருவருடனும் புகைப்படமும் எடுத்துக்கொண்டர். அதுதொடர்பான வீடியோவை சௌந்தர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X