படம் ரொம்ப நல்லா இருக்கு.. ரைட்டர் படக்குழுவினரை வாழ்த்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

சென்னை: பா. ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ரைட்டர் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி உள்ளார்.

Recommended Video

Writer Movie Review | Yessa ? Bussa ? | Samuthirakani | Franklin Jacob| Pa. Ranjith| Filmibeat Tamil

சமீப காலமாக ஏகப்பட்ட திரைப்படங்களை பார்த்து பாராட்டி வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

அறிமுக இயக்குநர் ஃபிராங்க்ளின் இயக்கிய ஜேக்கப் இயக்கிய ரைட்டர் திரைப்படம் பல பிரபலங்களால் பாராட்டப்பட்டு வந்த நிலையில், ரஜினிகாந்தின் பாராட்டை பெற்றது ரைட்டர் படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த ரைட்டர்

ரசிகர்களை கவர்ந்த ரைட்டர்

இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியான ரைட்டர் திரைப்படம் காவல் நிலையத்தில் நடைபெறும் ஏகப்பட்ட ஆழமான விஷயங்களை கையாண்டு எடுக்கப்பட்டதில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சமுத்திரகனி அபாரம்

சமுத்திரகனி அபாரம்

2021ம் ஆண்டு நடிகர் சமுத்திரகனிக்கு ஏகப்பட்ட படங்களும் நல்ல கதாபாத்திரங்களும் அமைந்துள்ளன. ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான ஏலே, ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி, சமுத்திரகனி இயக்கி நடித்த வினோதய சித்தம், ஸ்டன்ட் சில்வா இயக்கத்தில் வெளியான சித்திரைச் செவ்வானம் மற்றும் ஆண்டு இறுதியில் வெளியான ரைட்டர் என இந்த ஆண்டு மிரட்டி எடுத்துள்ளார் சமுத்திரகனி. அடுத்த ஆண்டு ஆரம்பமே ராஜமெளலியின் ஆர்.ஆர்.அர் படத்தின் மூலமும் அசத்த உள்ளார்.

ரஜினிகாந்த் பாராட்டு

ரஜினிகாந்த் பாராட்டு

டாக்டர், மாநாடு உள்ளிட்ட படங்களை பார்த்து பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ள ரைட்டர் திரைப்படத்தையும் பார்த்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளார். "ஃபெண்டாஸ்டிக் படம் என்றும் சமுத்திரகனி மிக சிறப்பாக நடித்து அசத்தி உள்ளார். இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் பாராட்டி உள்ளார்.

நன்றி ரஜினி சார்

நன்றி ரஜினி சார்

போன் கால் மூலம் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில், ரைட்டர் படக்குழு பிரத்யேக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி கூறியுள்ளனர். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கபாலி மற்றும் காலா என இரு படங்களில் சூப்பர்ஸ்டார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. காலா படத்தில் ரஜினிகாந்த் உடன் சமுத்திரகனியும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X