Coolie: கூலி சம்பவம் தொடங்கிடுச்சு.. தலைவருக்காக தலைநகர் மட்டுமல்ல தமிழ்நாடே ஆடுது.. மாஸ் வீடியோ!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படமான கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற்றுக் கொண்டு உள்ளது. ரசிகர்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கையே நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆவதால், அதன் கொண்டாட்டமும் இந்த இசை வெளியீட்டு விழாவோடு கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ரஜினிகாந்த் எனப்படும் சிவாஜிராவ் கெய்க்வாட். 50 ஆண்டுகால சினிமாவில் அவரது கலைப்பயணம் மிகவும் பரபரப்பானது. கூலி அவரது 171வது படம். கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை திரையில் பார்த்த ரஜினிகாந்த், பின்னர் அவருக்கு தொழிலில் போட்டியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தது எல்லாம் பாராட்டுக்குரியது.

Rajinikanth Coolie Audio Launch 50 Years Of Rajinikanth Fans Celebation Videos Goes Trending

50 ஆண்டுகள்: அதன் பின்னர் அவர் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, அதை கடந்த நான்கு தலைமுறை ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக இருக்கிறார் என்றால் சும்மா எல்லாம் இல்லை. தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளத்தை கொண்டாடித் தீர்க்கும் நிகழ்வாகவே கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா அமைந்துள்ளது. தமிழ் நாடு மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து எல்லாம் ரசிகர்கள் படையெடுத்து வந்துள்ளார்கள். ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் கொண்டாட்டத்தால் நேரு உள்விளையாட்டு அரங்கம் மொத்தமாகவே அதிரும் அளவுக்கு உள்ளது.

வீடியோக்கள்: இப்படியான நிலையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்குள் சென்ற ரசிகர்கள் அங்கு எடுத்த வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தலைவருக்காக தலைநகர் மட்டுமல்ல தமிழ்நாடே ஆடும். இசை வெளியீட்டு விழா சும்மா டிரைலர் தான், படம் ரிலீஸ் அன்னைக்குப் பாருங்க இதைவிட பல மடங்கு பெரிய சம்பவம் இருக்கு எனவும் உற்சாக வெள்ளத்தில் உள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X