Lokesh Kanagaraj: கார்த்திக் சுப்புராஜ் மூலம் சினிமாவிற்குள் வந்த லோகேஷ் கனகராஜ்.. சொத்து மதிப்பு!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தற்போது உள்ள மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். இவரது படங்கள் ஒவ்வொன்றும் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவிக்கிறது. யாருக்கு படம் செய்தாலும் சரி, தனது சினிமா பாணி இதுதான், நான் இப்படித்தான் படத்தை உருவாக்கப் போகிறேன் என தனது பாணி சினிமாவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளவர். இவர் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமான கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. படத்தில் பாலிவுட் சினிமாவில் தொடங்கி, தென்னிந்திய சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இவர் இதற்கு முன்னர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என ஐந்து படங்களை இயக்கியுள்ளார். இதில் கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்கள் எல்.சி.யு வில் வருகிறது. இதனால் கூலி படமும் எல்.சி.யு வில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தின் அப்டேட் இன்று ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். லோகேஷ் கனகராஜ் கூலி படக்குழுவுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜ்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ்: லோகேஷ் கனகராஜ் சினிமாவுக்குள் வர முக்கியமான காரணங்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். தனியார் நிறுவனங்கள் நடத்திய ஷார்ட் ஃபிலிம் போட்டியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜின் ஷார்ட் ஃபிலிம் கார்த்திக் சுப்பராஜின் கவனத்தை ஈர்த்தது, அதன் பின்னர் அவரது அறிமுகம் சினிமாவில் கால் பதிக்க முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக உள்ளார்.
சொத்து: இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. கூலி படத்திற்கு அவரது சம்பளம் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 40 கோடிகள் என கூறப்படுகிறது. மேலும் இவரது சொந்த வீட்டின் மதிப்பு ரூபாய் 2 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் கமல்ஹாசன் அவருக்கு லெக்சஸ் காரை பரிசாக வழங்கினார். இந்த காரின் மதிப்பு ரூபாய் 70 லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

குடும்பம்: மேலும் அவர் தனக்கு கிட்டத்தட்ட ரூபாய் 2 கோடிகள் மதிப்பில் பி.எம். டபள்யூ காரினை வாங்கியுள்ளார். இது கார் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிக்காட்டும் விதமாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது குடும்பத்தினரை இதுவரை வெளிக்காட்டியது இல்லை. இது தொடர்பாக கேள்வி கேட்டபோது, தனிப்பட்ட வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்க விரும்புகிறேன் என பளிச்சென்று பதில் சொல்லிவிட்டார். 39வது பிறந்த நாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜ்க்கு வாழ்த்துகள்.



Click it and Unblock the Notifications











