Coolie FDFS Celebration: தலைவர் பெருசா ஜெயிக்கணும்.. கூலி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் எமோஷனல்!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகியுள்ள படம் கூலி. இந்த படத்திற்கு தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குத்தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் காலை 6 மணிக்கு சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு படையெடுத்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரவேற்றுள்ளார்கள். அதேபோல் தமிழ்நாட்டிலும் ஆடிப் பாடி கொண்டாடி வருகிறார்கள்.

ஆந்திராவுக்கு சென்ற ரசிகர்கள் கூறுகையில், " காலை 9 மணி வரை காத்திருக்க மனசே இல்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறோம். சூரிய ஒளி படுவதற்கு முன்னரே திரையில் இருந்து தலைவரின் ஒளி எங்கள் மீது பட வேண்டும் என வந்துள்ளோம். தமிழ் சினிமாவில் வசூலில் தலைவர்தான் பெஞ்ச் மார்க் உருவாக்கிக் கொண்டு உள்ளார். அந்த வகையில் இந்த படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். கட்டாயம் 1000 கோடிகளை வசூல் செய்யும். தலைவர் ஜெயிக்கணும், அதுவும் பெருசா ஜெயிக்கணும். படம் பொதுமக்களுக்கும் பிடித்து மிகப்பெரிய வெற்றியை தலைவர் அடைய வேண்டும்.

Rajinikanth Coolie FDFS Celebration Goes High All Over India Video Goes Trending
Photo Credit:

சத்யராஜ், நாகர்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படி இருக்கும்போது மொத்த படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளதாலே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

கொண்டாட்டம்: தமிழ்நாட்டில் 9 மணிக் காட்சிகளுக்கு தியேட்டர்கள் முன் குவிந்த ரசிகர்கள் ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என கொண்டாடி வருகிறார்கள். 50 ஆண்டுகள் சினிமாவில் ரஜினி நிறைவு செய்கிறார். அதைக் கொண்டாட ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியிலும் நம்பிக்கையிலும் தியேட்டருக்கு வருகிறார்கள். தியேட்டர் முன் கட்-அவுட் வைப்பது, கட் அவுட்க்கு மாலை அணிவிப்பது என மொத்த சினிமா உலகின் கவனத்தையும் கூலி படத்தின் மீது திருப்பச் செய்துள்ளார்கள் ரசிகர்கள். படம் முன் பதிவிலேயே உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்த படத்தை இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதுமே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X