Coolie: பேம்பர்ஸ் போட்டுட்டு மோனிகா ஆட்டம்.. இதைவிட க்யூட் காட்டுனா லைஃப் டைம் செட்டில்மெண்ட்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள பாடலில் உலகப்புகழ் பெற்ற பாடல் என்றால் அது மோனிகா பாடல் தான். இந்த பாடலை ரசிகர்கள் பலரும் ரீல்ஸாக பதிவிட்டு இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த பாடலுக்கு சுமார் ஒன்றரை வயதுடைய குழந்தை செம க்யூட்டாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கூலி படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக ரஜினியின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படியான நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள மோனிகா பாடலுக்கு சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தை செம க்யூட்டாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் இதை விட க்யூட்டான மோனிகா பாடலின் ரீல்ஸ் வீடியோவை காட்டுபவர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் எனவும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

50 ஆண்டு சினிமா: ரஜினிகாந்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த 50 வது ஆண்டில் வெளியாகும் படம் தான் கூலி. கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பல்வேறு திரைத்துறையில் இருந்து பல ஸ்டார்கள் நடித்துள்ளார்கள்.
படக்குழு: தெலுங்கு திரைத்துறையில் இருந்து நாகார்ஜுனா, கன்னட திரைத்துறையில் இருந்து உபேந்திரா, மலையாள திரைத்துறையில் இருந்து சௌபின் சாகிர், இந்தி திரையுலகில் இருந்து அமீர் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. எப்படியும் ரூபாய் 1000 கோடிகளை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்யும் படமாக இது அமையும் என ரஜினி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரை உலகத்தினரும் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளார்கள்.
1000 கோடி வசூல்: பாலிவுட் சினிமாவான வார் 2 படமும அதே நாளில் வெளியாவதால், கூலி படத்துக்கு வட மாநிலங்களில் எந்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை வார் 2 படம் கொஞ்சம் சொதப்பல் ஆகி, கூலி படம் ஹிட் அடித்துவிட்டாலே வசூலில் 1000 கோடிகள் என்பது எளிதாகிவிடும் என்ற பேச்சும் ஓடிக்கொண்டு உள்ளது. வட மாநிலங்களில் இருந்து படத்திற்கு சுமார் 200 முதல் 300 கோடிகள் வசூல் ஆனால் மட்டுமே படத்தின் வசூல் ரூபாய் 1000 கோடிகளை எட்டும் என்ற பேச்சும் ஓடிக்கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











