விஜய், ரஜினிகாந்த் ஓவர்.. அடுத்து எந்த பெரிய தலையை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் தெரியுமா?

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், தானே நேரடியாக இயக்குநராக களமிறங்கி, இன்றைக்கு இருக்கும் முதன்மையான இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கின்றார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இவரது படங்கள் வேற லெவலில் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து, கூலி என்ற படத்தினை இயக்கி வருகின்றார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், அஜித்துடன் எப்போது படம் பண்ணப்போகின்றார் என்பது குறித்து பேசியுள்ளார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

lokesh kanagaraj ajithkumar coolie

லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவின் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், பேசியபோது கூட, அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்தம் இல்லாத சினிமாவை என்னால் எடுக்க முடியாது எனக் கூறினார். இவரிடத்தில் இப்படியான கேள்வியைக் கேட்கும் அளவுக்கு, இவரது படத்தில் அதிகப்படியான வன்முறைக் காட்சிகள் இருக்கும். அதேபோல் இவர் தனது படங்களில் நடித்த நடிகர்களைக் கொண்டு, தனக்கென தனி சினிமா உலகத்தையே உருவாக்கிக் கொண்டு உள்ளார். அதனை ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸ் என அழைக்கின்றனர். அந்த வகையில், லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில், இதுவரை கைதி, விக்ரம் மற்றும் லியோ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.

lokesh kanagaraj ajithkumar coolie

தற்போது இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கூலி என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. படத்தில், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினையும் எல்.சியூவிற்குள் கொண்டுவர ஏதுவான திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் அமைத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

lokesh kanagaraj ajithkumar coolie

அஜித்: இப்படியான நிலையில், இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை. இப்படியான நிலையில்தான், லோகேஷ் கனகராஜ் தான் விரைவில் அஜித்குமாருடன் இணைந்து படம் பண்ணுவேன் எனத் தெரிவித்துள்ளார். அதாவது இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், " எனக்கும் அஜித் சாருடன் இணைந்து படம் பண்ணவேண்டும் என்ற ஆசை உள்ளது. கட்டாயம் அவருடன் இணைந்து படம் பண்ணுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

lokesh kanagaraj ajithkumar coolie

கேள்வி: இதனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, எல்.சியூவில் வெளியான கடைசிப் படமான லியோவில், விக்ரம் மற்றும், கைதி படத்தில் இருந்து சில காட்சிகளும் கதாபாத்திரங்களும் இடம் பெற்றது. அப்படி இருக்கும்போது, விஜய் சினிமாவில் இருந்து விலகி, அரசியலுக்குச் செல்வதாக முடிவெடுத்துவிட்டதால், இனி அந்த கதை என்ன ஆகும் என்பது குறித்து ரசிகர்கள் மனதில் கேள்வி உள்ளது.

lokesh kanagaraj ajithkumar coolie

எல்.சி.யூவில் அஜித்: இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் அஜித்துடன் படம் செய்ய தனக்கு விருப்பம் இருப்பதைத் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அது நடக்கும் என நம்பிக்கையும் தெரிவித்துள்ளதால், லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸில் அஜித்தை விரைவில் பார்க்கலாம் என ரசிகர்கள் இப்போதே மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அஜித்தை இயக்குவது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

lokesh kanagaraj ajithkumar coolie

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X