Coolie: சென்சார் முடிந்த பின்னர் சேர்க்கப்பட்ட காட்சிகள்.. இப்போ படத்தின் நீளம் என்னனு தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அமீர்கான், பூஜா ஹெக்டே ஆகியோர் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரெப்பா மோனிகா ஜான், சௌபின் ஷாஹிர், ஜூனியர் எம்.ஜி.ஆர். உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு ( எடிட்டிங்) வேலைகளைச் செய்துள்ளார். பான் இந்தியா திரைப் படமாக உருவாகியுள்ள 'கூலி' படத்திற்கு தணிக்கைக்குழு A சான்றிதழ் வழங்கியது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தணிக்கைக் குழுவால் தணிக்கை செய்யப்பட்ட பின்னர் படத்தில் மேலும் சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

Rajinikanth Coolie Movie Running Time Increase After Censor Details Here

சென்சார் செய்யப்பட்ட பின் சில காட்சிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக சென்சார் அதிகாரி ஏ. முத்து கிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (CBFC) சென்னை பிரிவு சென்சார் அதிகாரி ஏ. முத்து கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், படம் முதலில் சென்சார் செய்யப்பட்ட போது அதன், நீளம் 169.57 நிமிடங்கள் இருந்ததாகவும், சென்சார் செய்யப்பட்ட பின்னர் கூடுதல் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது படத்தின் மொத்த நீளம் 170.22 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.

படத்தில் சேர்க்கப்பட்ட காட்சிகள்: இந்த மாற்றங்கள் சென்சார் விதி 33-ன் படி செய்யப்பட்டுள்ளது. சென்சார் செய்யப்பட்ட பின்னர், ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் அனிமேஷன் 'ரஜினி 50 இயர்ஸ்' வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. சௌபின் ஷாஹிர் நடித்த தயாள் கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சிக்கு ராப் இசையுடன் கூடிய பிட் சேர்க்கப்பட்டுள்ளது. நாகார்ஜுனா நடித்த சைமன் சிலரை தாக்கும் காட்சிகளுக்கும், சைமன் தயாளை தாக்கும் காட்சிக்கும் ராப் இசை சேர்க்கப்பட்டுள்ளது.

Rajinikanth Coolie Movie Running Time Increase After Censor Details Here

பெரிய மாற்றம் இல்லை: "ஆல் யூ மாப்ஸ்டர்ஸ்" பாடல் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் தேவா (ரஜினிகாந்த்), ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்) நடக்கும் காட்சிக்கு அந்த பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், தேவா ரவுடிகளை தாக்கும் காட்சிக்கு "லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்" என்ற ராப் பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு பெண் தனது கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து, சிலரைக் கொல்லும் காட்சியில் "யூ ஹேவ் காட் தட் லுக்" என்ற பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. சென்சார் செய்யப்பட்ட பின்னர் படத்தில் இணைக்கப்பட்ட காட்சிகளால் படத்தின் நீளத்தில் பெரிய மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 ஆண்டுகளுக்குப் பின்னர்: 'கூலி' படத்திற்கு இந்தியாவில் 'A' சான்றிதழும், துபாயில் 'PG15' சான்றிதழும் கிடைத்துள்ளது. துபாயில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் படத்தை பார்க்கலாம். 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக A சான்றிதழ் பெற்ற படங்களுக்கு குடும்ப ரசிகர்களின் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கும் என்ற கேள்வி உள்ளது. இதையெல்லாம் கடந்து படம் 1000 கோடி வசூலிக்கும் என திரைத்துறையில் அடிபடும் பேச்சுக்கு பலன் கிடைக்குமா கிடைக்காதா என்பதை படம் வெளியான பின்னர் தான் கூற முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X