Coolie: பூஜா ஹெக்டேவுக்கு ஒரு தேசிய கீதமா மோனிகா பாட்டு.. பீட்டு செம்மையா இருக்கே.. எப்போ ரிலீஸ்?

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகளை படக்குழு செய்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே படக்குழு சார்பில் சிக்கிடு வைப் என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் படத்தில் இரண்டாவது பாடலாக பூஜா ஹெக்டேவுக்கான பாடல் வெளியிடப்படவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. மோனிகா என்ற இந்த பாடலுக்கு பூஹா ஹெக்டே நடனமாடுகிறார். இது மட்டும் இல்லாமல், பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிக்கவில்லை எனவும், இந்த ஒரு பாடலுக்கு மட்டும்தான் நடனமாடுகிறார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த மோனிகா பாடலை வரும் 11ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த பாடலின் அறிவிப்புக்காக படக்குழு 21 நொடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ’மோனிகா’ என்ற பெயர் பாடல் வரிகளிலேயே இடம் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல் பாடலின் ஒரு பகுதியை அனிருத் பாடியுள்ளார் என்பது நன்றாக தெரிகிறது. இது மட்டும் இல்லாமல், பாடலின் மெட்டு ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பைப் பெற்றுள்ளது. அனிருத் என்றாலே துள்ளலான இசை மெட்டுதான் என்பதை ஒவ்வொரு படத்திற்கும் பாடலுக்கும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். ஏற்கனவே படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட சிக்குடு வைப் என்ற பாடலை இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என சினிமா துறையில் சகலகலா வல்லவனாக திகழும் டி. ராஜேந்திரன் உடன் இணைந்து உருவாக்கி இருந்தார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது.

Rajinikanth Coolie Movie Second Single For Pooja Hegde Monica Song Will Release July 11

50 ஆண்டுகள்: கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது படம். இது மட்டும் இல்லாமல் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு 75 வயது ஆகிறது. சினிமாவில் அவர் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டில் கூலி படம் வெளியாவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் எகிறிக் கொண்டுதான் உள்ளது. படத்தின் ஓடிடி பிசினஸ் ஏற்கனவே தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கான ஓடிடி பிசினஸைச் செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.

LCU: இது மட்டும் இல்லாமல் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பதால், கூலி படம் ஏற்கனவே உள்ள லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இடம் பெறக்கூடிய படமா என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், கூலி படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ஆங்கிலத்தில் Welcome To World Of Coolie என குறிப்பிடப்பட்டு வருவதால் இந்த படம் தனி யுனிவர்ஸாக இருக்குமா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X