Coolie: சவுண்டை ஏத்த சொல்லி வரும் அப்டேட்.. விஜய் பிறந்த நாள் முடிந்ததும் களத்தில் குதித்த தலைவர்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் டப்பிங், எடிட்டிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் படத்தின் அப்டேட் இன்று அதாவது ஜூன் 23ஆம் தேதி மாலை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர்களில் தனது சினிமாக்களுக்கு என தனி யுனிவர்ஸை உருவாக்கி அதன் மூலம், தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவரது கைதி, விக்ரம், லியோ போன்ற படங்கள் எல்லாம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் வரிசையில் அடுத்தடுத்து வெளியாகிய படங்கள். இதில் அடுத்ததாக கூலி படமும் இணையுமா அல்லது கூலி படத்தை தனியாக வைத்து ஏதாவது, தனி சினிமாட்டிக் யுனிவர்ஸை லோகேஷ் கனகராஜ் உருவாக்க உள்ளாரா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் வில்லனாக நாகர்ஜுனா நடித்துள்ளார். மேலும் படத்தில் சத்யராஜ், மலையாள நடிகர் சோபின், ஸ்ருது ஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 50 வது ஆண்டில் கூலி படம் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் மீது இயல்பாகவே ரசிகர்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது.
வசூல் பெஞ்ச் மார்க்: கூலி படத்தைப் பொறுத்தவரை இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது படம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற தகவல் கசிந்ததில் இருந்து ஏறிய ஹைப் இப்போது வரை இறங்கவில்லை. அதுவும் படத்தில் இணைந்த மிகப்பெரிய நடிகர்களின் பட்டாளத்தைப் பார்க்கும்போது மொத்த தமிழ் சினிமாவும் இந்த படம் வணிக ரீதியாக புதிய பெஞ்ச் மார்க்கை உருவாக்கும் என நம்பிக் கொண்டு உள்ளது.

கூலிக்கு உள்ள சிக்கல்: கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில், திரையுலகில் தற்போது அந்த ரிலீஸ் தேதிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. அதாவது, ஆகஸ்ட் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டோலிவுட் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த வார் 2 படமும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதால் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கூலி படத்தை எதிர்பார்த்த அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியாது என கூறப்படுகிறது.
விஜய் உடன் போட்டியா?: இந்நிலையில் இன்று மாலை அதாவது ஜூன் 23ஆம் தேதி மாலை 6 மணிக்கு படத்தின் புது அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. இது மாத்திரம் இல்லாமல், விஜய் தனது பிறந்தநாளுக்கு ஜன நாயகன் படத்தின் கிலிம்ஸ் வீடியோவை வெளியிட்டனர். அதனால்தான் இன்று ரஜினியின் கூலி படத்தில் இருந்து அப்டேட் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











