கூலி படம் தான் ரஜினிகாந்தின் கடைசி படம்?.. நியூமராலஜி நிபுணர் திடீரென போட்ட குண்டு!

ரஜினிகாந்த் திரைத்துறையிலிருந்து விலகும் சூழ்நிலை வந்தால் என்ன நடக்கும்? கூலி படத்தின் தலைப்பு ரஜினிக்கு சிக்கலை தருமா? பிரபல நியூமராலஜி நிபுணர் டாக்டர்.ஜேஎன்எஸ் செல்வன் அவர்கள் கூலி படத்தின் தலைப்பு ரஜினிகாந்திற்கு சாதகமா பாதகமா என்பதை கணித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு "கூலி" என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்பிற்கு எண் கணித ரீதியாக உள்ள சாதக பாதகங்களை பற்றி டாக்டர்.ஜேஎன்எஸ் செல்வன் அவர்கள் அலசி ஆராய்ந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நியூமராலஜி எண் 46. இது ஒரு மிகச்சிறந்த எண். அதேபோல ரஜினிகாந்தின் உண்மையான பெயரான சிவாஜி ராவ் கைக்வாட் என்பதன் கூட்டுத் தொகையும் 46. ஆகையால் சன் பிக்சர்ஸ்க்கும் ரஜினிகாந்திற்கும் இந்த 46 மிகவும் பொருத்தமான எண் ஆகும்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை தரும். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளின் கூட்டுஎண் 14. பிரபஞ்ச சக்தி நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று இல்லாமல் இல்லை. அந்த வகையில் இந்த கூலி திரைப்படம் வெற்றி பெறும் என்கிறார்.

ரஜினிகாந்தின் பிறந்த தேதி 12/12/1950. இதை கூட்டினால் வரும் எண் 3. மூன்றாம் எண் நீதி, நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாடு போன்றவற்றை குறிக்கும். ரஜினிகாந்த் எப்பொழுதும் நீதியாகவும் உண்மையாகவும் நடந்திருப்பதை நாம் அறிவோம்.

மூன்றாம் எண்ணுக்கு ஆகாத எண்கள் ஆறு மற்றும் எட்டு. இந்த எண்கள் ரஜினிகாந்திற்கு பின்னடைவை தந்துள்ளது. இதற்கு முன்னால் ரஜினிகாந்த் நடித்து வெளியான வள்ளி, பாபா, காலா, கோச்சடையான் போன்ற படங்கள் சரியாக ஓடவில்லை. இந்த படங்களின் பெயர்களின் கூட்டு எண் ஆறு மற்றும் எட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கூலி (Coolie) என்ற பெயரின் கூட்டு எண் 26 அதாவது 2+6=8. ஒருவேளை இந்த பெயர் மாற்றப்படவில்லை என்றால் ரஜினிகாந்த் திரைத்துறையிலிருந்து விலகுவதற்கு வாய்ப்புள்ளது. ரஜினிகாந்திற்கு இதுவே கடைசி படமாக அமையக்கூடும். ஆகையால் படத்தின் தயாரிப்பாளர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். Cooli என வைத்தால் கூட படம் வெற்றியாகும் என எண் கணித நிபுணர் ஜேஎன்எஸ் செல்வன் கூறியுள்ளார்.

ஆனால், “போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” என தொடர்ந்து உழைப்பை நம்பி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இதையெல்லாம் சுக்குநூறாக உடைத்து பெரும் வெற்றி பெறும் என்றும் அப்போது இருக்கு இந்த ஆளுக்கு என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், இதைப்போல 50 வருஷமா பலர் ரஜினிக்கு ஜோஷியம் பார்த்து தோற்றுப் போயுள்ளனர். ஆனால், அவர் எப்போதுமே கிங் தான் எனக் கூறி வருகின்றனர்.

மேலும், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் ஏற்கனவே ரஜினிகாந்த் பாதி படத்துக்கும் மேலாக நடித்து விட்டது குறிப்பிடத்தக்கது. கூலி படத்திற்கு பிறகு ஜெயிலர் 2 படம் வரும் என்றும் அந்த படத்தை முடித்து விட்டு மீண்டும் கூட அவர் நடிப்பார் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X