சீக்கிரம் சம்பவம் பண்ணிடுவாங்க போல.. கூலி படத்தோட முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் செம குஷி

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஜெயிலர் படத்தை போன்றே இப்படமும் 500 காேடியை தாண்டும் என தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. படத்தின் அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் செம குஷியடைந்துள்ளனர்.

லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய பட்ஜெட்டில் ரஜினியை வைத்து இயக்கியிருக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகர்ஜூனா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும், நடிகை பூஜா ஹெக்டே ஒரு பட பாடலுக்கு நடனம் ஆடியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. கூலி படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். கமலுக்கு விக்ரம் படத்தை போன்று ரஜினிக்கு கூலி மிகப்பெரிய ஹிட் தரும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

rajinikanth-coolie-movie-update

சத்யராஜின் மகளா ஸ்ருதி: நீண்ட இடைவெளிக்கு பிறகு சத்யராஜ் ரஜினியுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வில்லனா, குணசித்திரமா என்பது தெரியவில்லை. இப்படத்தில் சத்யராஜூவுக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சத்யராஜ் சினிமாவில் வில்லனாக நடித்த போது கமல் நிறைய வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார். கமல் நண்பராகவும் இருக்கிறார். அதனால், ஸ்ருதி அவருக்கு மகளாக நடிப்பதில் ஆச்சர்யமில்லை. திரையில் இருவரது சென்டிமென்ட் காட்சிகள் தரமாகத்தான் இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.

தங்கம் கடத்தல்: லோகேஷ் கனகராஜ் படங்களில் போதை பொருள் ஒரு தீமாகவே செட்டப் செய்துவிடுவார். அதை வைத்து கதை நகர்வது போன்றே அவர் இயக்கிய படங்களும் இருக்கும். இது கைதி படத்தில் இருந்தே தொடர்கிறது. அதேபோன்று அவரது படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். கூலி படத்தில் இடம்பெற்ற சிக்கு வைப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினியின் நடனமும் ரசிக்கும் படியே இருந்தன. அதேபோன்று வேறு ஏதேனும் ஐடியாக்களை தூவி விடுவார் என்றும் நம்பப்படுகிறது. அதேபோன்று போதை கடத்தலில் இருந்து தங்க கடத்தலுக்கு மாறியிருக்கிறார் லோகேஷ். இதில், கேங்ஸ்டர்களை அழிக்கும் கூட்டத்தில் மெகா ஹூரோக்களும் இணைவார்கள் என்பது போலத்தான் கதை அமைத்திருப்பார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

rajinikanth-coolie-movie-update

டிரைலர் எப்போது: கடந்த மாதம் கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். எனவே, கூலி படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடப்பதால் பட டிரைலர் அல்லது டீசர் அப்டேட் எப்போது என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முன்னதாக கூலி படத்திற்கான இசைகோர்ப்பு பணிகளை அனிருத் முடித்துவிட்டாராம். இனி எல்லாம் லோகேஷின் கையில்தான் இருக்கிறதாம். படமும் தீபாவளி ரேஸில் வருகிறதா என்பது கணிக்க முடியவில்லை. இதனிடையே ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையில் சன்பிக்சர்ஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் நாளை முக்கிய அப்டேட் என குறிப்பிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தில் ரிலீஸ் தேதியா அல்லது டிரைலர் வெளியாக இருக்கிறதா என குழப்பத்தில் இருக்கின்றனர். நாளை எது வந்தாலும் சரி கொண்டாட தயாராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X