Coolie Pre Booking: அமெரிக்காவில் புக்கிங்கை தொடங்கிய சூப்பர் ஸ்டாரின் கூலி.. மாஸ் ஓபனிங் மாமே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் கூலி. இந்த படம் ரஜினிகாந்தின் 171வது படம். இது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், அந்த 50 வது ஆண்டில் வெளியாகவுள்ள படம் என்பதாலும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் படத்தின் புக்கிங் அமெரிக்காவில் தொடங்கிவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூலி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா, அமீர் கான், ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தில் இருந்து மொத்தம் மூன்று பாடல்கள் இதுவரை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக மோனிகா பாடல் கூலி படத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துவிட்டது.

Rajinikanth Coolie Movie USA Pre Booking Starts Today Coolie Hastag Going Trending
Photo Credit:

புரோமோஷன்கள்: இந்நிலையில் படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 8 அல்லது 9ஆம் தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் இசை வெளியீட்டு விழா நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது, மேலும் அன்றைய தினமே டிரைலரும் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பான் இந்தியா: இந்த படத்தை பான் இந்தியா அளவுக்கு அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது. படத்தின் கதையும் அந்த அளவுக்கு இருக்கிறது என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கும்போது, படத்தின் புக்கிங் வெளிநாடுகளில் தொடங்கிவிட்டது. அதாவது, அமெரிக்காவில் படத்தின் புக்கிங் தொடங்கிவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமம், தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது கூலி படத்தின் வெளிநாட்டு உரிமம் மட்டும் ரூபாய் 81 கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. இது இதுவரை தமிழ் சினிமா படங்களிலேயே அதிக வெளிநாட்டு உரிமத்திற்கு விற்கப்பட்ட படமாக மாறியது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது.

Rajinikanth Coolie Movie USA Pre Booking Starts Today Coolie Hastag Going Trending
Photo Credit:

அமெரிக்கா புக்கிங்: இந்நிலையில் படத்தின் அமெரிக்க புக்கிங் இன்று நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. கூலி படத்தை வெளிநாடுகளில் ஹாம்சினி என்டர்டைமெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அமெரிக்காவில் புக்கிங் தொடங்கியது தொடர்பான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல், நேற்று அதாவது ஜூலை 24ஆம் தேதி படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான பவர் ஹவுஸ் பாடலை ஹைதராபாத்தில் படக்குழு ஸ்பெஷலாக ரசிகர்கள் முன்னால் அரங்கேற்றம் செய்தது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இணையத்தில் கூலி ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவில் விரைவில் ப்ரீ புக்கிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ப்ரீ புக்கிங்கில் கூலி எவ்வளவு வசூல் செய்யவுள்ளது என ரசிகர்கள் அவலோடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X