Coolie Disaster: அண்ணாத்த நம்ம கிட்ட மாட்டல நாமதான் திருப்பி அண்ணாத்த கிட்ட மாட்டிருக்கோம்.. நெட்டிசன்ஸ் கலாய்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படம் இன்று அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தில் ரஜினி கதாநாயகனாகவும், நாகர்ஜுனா, ஆமிர் கான், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்கள். படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இணையவாசிகள் படத்தை தோல்விப் படம் என ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் தனது திரை வாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி கூலி படம் வெளியாகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் தியேட்டரை இன்றே தீபாவளி போல மாற்றி வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, படம் தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணிக்குத்தான் திரையிடப்படவுள்ளது. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவில் காலை 6 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள்.

Rajinikanth Coolie Movie X Page Reactions Coolie Disaster Hashtag Goes High
Photo Credit:

அதேபோல் வெளிநாடுகளில் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற வகையில் படம் முன்கூட்டியே திரையிடப்பட்டு வருகிறது. இதனால் வெளி மாநிலங்களில் வெளிநாடுகளில் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் குறித்து தங்களது விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், பல ரசிகர்கள் படம் நன்றாக உள்ளது என்கிறார்கள். பல ரசிகர்கள் படம் ஆவரேஜ் என்கிறார்கள். அதேபோல் சிலர் படம் மொக்கை என்கிறார்கள்.

கூலி டிசாஸ்ட்டர்: படம் நன்றாக இல்லை எனக் கூறும் ரசிகர்களின் எக்ஸ் பக்க போஸ்ட்க்கு சில இணையவாசிகள் கூலி டிசாஸ்ட்டர் என ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். சில ரசிகர்கள் படத்தின் சில காட்சிகளை மொபைலில் படம் பிடித்து அதை இணையத்தில் வேகமாக பரப்பி வருகிறார்கள். அந்த காட்சிகளை பார்த்த இணையவாசிகள் என்ன மொக்கை காட்சிகளாக உள்ளது. இந்த படம் தான் ஆயிரம் கோடிகள் வசூலிக்குதா? என்று எல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மாட்டினது யாரு?: மேலும் சில இணையவாசிகள், " அண்ணாத்த நம்ம கிட்ட மாட்டல, நாம தான் திரும்பவும் அண்ணாத்த கிட்ட மாட்டி இருக்கோம் Coolie Disaster என பதிவிட்டு வருகிறார்கள். கூலி படம் நன்றாக இல்லை , Coolie Disaster என பதிவிடும் இணையவாசிகள் பலரது டிபி விஜய், அல்லது தவெக கொடி என இருப்பதால் விஜய் ரசிகர்கள் தான் ரஜினி மீது வன்மத்தை கொட்டி வருகிறார்கள் என விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு ரஜினி ரசிகர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X