Coolie Overseas Censor & Review: கூலி வெளிநாட்டில் என்ன ரெஸ்பான்ஸ்? முதல் விமர்சனம் இதோ!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படம் வரும் 14ஆம் ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படம் 13 ஆம் தேதி இரவே வெளிநாடுகளில் ப்ரீமியர் ஷோக்களில் திரையிடப்படவுள்ளது. இப்படி இருக்கும்போது, வெளிநாட்டில் படம் பார்த்த சென்சார் போர்டு அதிகாரி தனது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினி, நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாச, ஆமிர் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், டிரைலர், மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கு இந்திய தணிக்கைச் சான்றிதழ் குழு 18 வயது அடைந்தோர் மற்றும் அதற்கு மேலானவர்கள் பார்க்க ஏதுவான படம் என 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஓவர்சீஸ் விமர்சனம்: இப்படி இருக்கும்போது, படத்திற்கு வெளிநாட்டிலும் ஏ சான்றிதழே வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு தணிக்கை குழு உறுப்பினர் உமைர் சந்து தனது எக்ஸ் பக்கத்தில் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதாவது, " கூலி படம் ரஜினிக்கு மாஸான படமாக அமிந்துள்ளது. ரஜினியின் கதாபாத்திரம் மட்டும் இல்லாமல் மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்துள்ளார்கள்., கதாபாத்திர வடிவமைப்பும் சிறப்பு. படத்தின் கதை மிகவும் ஆவரேஜான கதையாகத்தான் உள்ளது. படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மற்றும் கிளைமாக்ஸ் படத்தின் முதுகெழும்பாக உள்ளது. 5க்கு 3.5 ஸ்டார் என ஸ்டார் ரேட்டிங் உடன் பதிவிட்டுள்ளார்.
ரஜினி 50: இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் வார் 2 மற்றும் கூலி படத்தின் சென்சார் குறித்தும் பதிவிட்டுள்ளார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. கூலி படம் ரஜினிகாந்த்தின் 171வது படம். இந்த ஆண்டில் அவர் தனது 50வது ஆண்டு சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கிறார். கூலி படமும் வார் 2 படமும் நேருக்கு நேர் மோதவுள்ளது. ஆனால் இதுவரை டிக்கெட் முன்பதிவு தொடங்கி பல விஷயங்களில் கூலி படம் தான் பாசிடிவான ரெஸ்பான்ஸைக் கொண்டுள்ளது.

கெத்து: டிக்கெட் விற்பனையில் கூட இதுவரை ரூபாய் 60 கோடிகளுக்கு மேலாக முன் பதிவிலேயே படம் வசூலித்து விட்டதாக கூறப்படுகிறது. வார் 2 படம் இதுவரை ரூபாய் 6.5 கோடிகள் தான் வசூலித்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது. மேலும் வியாபார முகங்களாக கணக்கில் கொண்டால், வார் 2 படத்திற்கு பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் தான் வியாபாரம். ஆனால் கூலியில் மொத்த தென்னிந்திய சினிமாவுக்கும் பிரதிநிதிகள் உள்ளனர். அதேபோல், பாலிவுட் சினிமாவுக்கு ஆமிர் கான் உள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடனமாடியுள்ளார். எம்.ஜி.ஆர் பேரன் இந்த படத்தில் நடித்துள்ளார். படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











