Coolie: தலைவர் கிட்டயேவா..! லியோவை சிங்கிள் ஹேண்டில் டீல் செய்த கூலி.. வசூலில் புதிய சாதனை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இந்த மாதம் தொடங்கியதிலிருந்தே இந்திய சினிமா உலகில் ஹாட் டாபிக். 50 ஆண்டுகள் சினிமா வாழ்க்கையில் ஜொலித்து வரும் சூப்பர் ஸ்டாரின் 171 வது படமான கூலி படம் நாளை அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் பலரும் படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய ஹிட் அடிக்க வேண்டும் என வாழ்த்தி வருகிறார்கள். அதே நேரத்தில் ரஜினியின் 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கைக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் படம் வட அமெரிக்காவில் மட்டும் இதுவரை எந்த தமிழ் படமும் வசூலிக்காத அளவுக்கு, அட்வான்ஸ் புக்கிங்கிலேயே வசூலித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற கருப்பு வெள்ளை படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாளை மறுநாள் உடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இப்படி இருக்கும்போது, இவரது ரசிகர்களுக்கு ரஜினியின் 50வது ஆண்டு சினிமா வாழ்க்கையை அதாவது ரஜினியிசத்தை கொண்டாடும் வகையில் கூலி படம் வெளியாகவுள்ளது.
படம் ப்ரீ ரிலீஸிலேயே பல நூறு கோடிகளை வசூலித்து விட்டது. அதேபோல், டிக்கெட் முன்பதிவில் மட்டும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூபாய் 100 கோடிகளை எட்டியுள்ளது எனவும் கூறப்படுகிறது. நாளைய தினத்தில் இந்திய அளவில் இரண்டு படங்கள் மட்டுமே பேசுபொருள். ஒன்று ரஜினியின் கூலி, மற்றொன்று ஹ்ரித்திக் ரோஷனின் வார் 2.

படக்குழு: லோகேஷ் கனகராஜ் இயக்கி, சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் அமீர் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரச்சிதா ராம், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர்., கண்ணா ரவி, மோனிஷா பிளெஸ்ஸி, காளி வெங்கட், சார்லி உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளார்கள். பூஜா ஹெக்டே கிளாமராக நடனமாடிய "மோனிகா" பாடல் மொத்த உலகத்திற்கும் படத்தைக் கொண்டுபோய் சேர்த்துள்ளது.
புதிய சாதனை: இந்நிலையில் படம் இன்று இரவு அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு அமெரிக்காவில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் படத்தை அமெரிக்காவில் வெளியிடும் ஹம்சினி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் படம் ப்ரீ புக்கிங்கில் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இது எந்த தமிழ் படமும் இதுவரை செய்திடாத வசூல். இதற்கு முன்னர் அதிகமாக விஜய்யின் லியோ 18 லட்சம் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்திருந்தது. இதனால் கூலி படம் வட அமெரிக்க ப்ரீ புக்கிங் வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த தகவல் தற்போது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











