Coolie Review: கூலி தலைவலியாம்.. ஹையஸ்ட் பேய்ட் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி சொல்லிட்டாரு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படம் இன்று அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் படம் நன்றாக இல்லை என்றும் சிலர் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக விஜய் ரசிகர்கள் படம் நன்றாக இல்லை என்று தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஹையஸ்ட் பேய்ட் விமர்சகர் எனக் கூறப்படும் பிரசாந்த் ரங்கசாமி படம் குறித்து தனது கருத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நாளில் கூலி படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். படம் ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போன படமாக உள்ளது. ரஜினி ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசமாக இருக்கிறார் என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இப்படி இருக்கும்போது, விஜய் ரசிகர்கள் இணைய தளத்தில் கூலி படம் நன்றாக இல்லை என கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், படம் வணிக ரீதியான தோல்விப் படம் எனவும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் விமர்சகர்களில் ஹையஸ்ட் பேய்ட் விமர்சகர் எனப்படும், பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில், கூலி - தலைவலி என பதிவிட்டுள்ளார். இது ரஜினி ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பிரசாந்த் ரங்கசாமி விஜய் ரசிகர் அதனால் தான் இவ்வாறு விமர்சிக்கிறார் என்று எல்லாம், கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினி மாஸ்: கூலி படம் நன்றாக உள்ளது எனவும், படத்தின் திரைக்கதை மட்டும் கொஞ்சம் ஒர்க்-அவுட் ஆகியிருந்தால் மிகப்பெரிய வசூலை உலக அளவில் குவித்திருக்கும் எனவும் கூறி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், கூலி படம் ரஜினி ரசிகர்களுக்கு கட்டாயம் பிடிக்கும் எனவும், ரஜினி படம் முழுக்க செம மாஸாக இருக்கிறார் எனவும் விமர்சித்து வருகிறார்கள்.
வசூல் எதிர்பார்ப்பு: படம் ஏற்கனவே ப்ரீ ரிலீஸில் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டதால் முதல் நாள் வசூலில் மட்டும் எப்படியும் ரூபாய் 200 கோடிகளை நெருங்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு உள்ளார்கள். இப்படி இருக்கும்போது, மொத்த தமிழ் திரையுலகமும் இந்த படம் தமிழ் சினிமாவில் ரூபாய் 1000 கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்த்துக் கொண்டு உள்ளது. படம் எப்படியும் தமிழ் சினிமாவில் வசூலில் புதிய மைல்கல்லை எட்டும் என விமர்சித்து வருகிறார்கள்.

கூலி - போலி: கூலி படத்திற்கு ஏற்கனவே கிறிஸ்டோபர் கனகராஜ் என்ற விமர்சகர் தனது எக்ஸ் பக்கத்தில் கூலி - போலி என பதிவிட்டிருந்தார். அதுவுமே ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட் தான். கூலி படத்திற்கு பான் இந்தியா அளவில் சவால் விடும் அளவுக்கு வெளியான படம் வார் 2. இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படமும் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











