Coolie Public Review: ஜெயிலருக்கு அப்புறம் கூலி தான்.. இலங்கை ரசிகர்கள் கொண்டாடுறாங்கப்பா
இலங்கை: திரைத்துறையில் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஆண்டில் அவரது 171 வது படமான கூலி உலகம் முழுவதும் இன்று அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பும் உச்சகட்ட வரவேற்பும் கிடைத்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. இப்படி இருக்கும்போது, இலங்கையில் படம் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்து தெரிவித்துள்ளார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது ரசிகர் ஒவரு கூறுகையில், " படம் நன்றாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் வேற லெவலில் இருக்கிறது. படத்திற்கு 1000 கோடிகள் கன்ஃபார்ம். படம் முழுவதும் நன்றாக உள்ளது. ரஜினிக்காகவே நாங்கள் படத்திற்கு வந்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஜெயிலருக்கு அடுத்து: இன்னொரு ரசிகர் கூறும்போது, " படத்தை குடும்பத்துடன் கூட சென்று பார்க்கலாம். இது வழக்கமான லோகேஷ் கனகராஜ் படம் தான். ரெட்ரோ பாடல்கள் எல்லாம் போட்டு படத்தை பிரமாதப்படுத்தி விட்டார். எல்.சி.யூக்கு இணையாக படம் எப்படி இருக்க வேண்டுமோ அதேபோல் இந்த படம் உள்ளது. ரஜினிகான சரியான படமாக இது அமைந்துள்ளது. ஜெயிலருக்கு அப்புறம் கூலி தான். எதிர்பார்த்த அளவுக்கு கேமியோ கதாபாத்திரங்கள் இல்லை. ஆனால் டிரைலரில் காட்டியது போல உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ரஜினி பாவம்: இன்னொரு ரசிகர் கூறும்போது, " ரஜினி பாவம் அவரை வெச்சு செஞ்சு விட்டார்கள். படத்தின் முதல் பாதி நன்றாக உள்ளது. குறிப்பாக முதல் 20 நிமிடங்கள் தரம். ஆனால் இரண்டாம் பாதி அப்படி இல்லை. படம் முழுவதுமே கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், ரஜினி தான் சிறப்பு. ஆனால் படத்தில் கதையாக ஒரு விஷயமும் இல்லை, சும்மா சப்புனு இருக்கு. படத்தை ஒருமுறை பார்க்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

சிறப்போ சிறப்பு: அதேபோல் இன்னொரு ரசிகர், " படத்தில் ஸ்டைல், கதை, ஆக்ஷன் என எல்லாம் நன்றாக இருந்தது. படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சிறப்பாக இருந்தது. படத்தில் கேமியோக்களும் அந்தந்த இடத்திற்கு ஏற்ற வகையில் கேமியோக்கள் உள்ளன. ரஜினி ரசிகர்களுக்கு படம் கட்டாயம் பிடிக்கும். அனிருத் இசை படத்திற்கு நன்றாக உள்ளது" எனத் தெரிவித்ததுள்ளார். இலங்கை ரசிகர்களின் இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











