Coolie: நள்ளிரவில் வெளியாகிறதா கூலி டிரைலர்? வாட்ச் காட்டிட்டாங்க.. அப்போ டைம் இதுதானா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ராப்பகலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டிரைலர் எப்போது ரிலீஸ் என்ற அறிவிப்புக்கு படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் போஸ்டரில் தேதி மட்டும் இருப்பதால் நேரம் நள்ளிரவு தான் என ரசிகர்களே தீர்மானிக்கத் தொடங்கிவிட்டனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூலி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர், ஸ்ருதி ஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார். இவருக்கு படத்திலும் ஏதாவது கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைத்து உள்ளனர்.

Rajinikanth Coolie Trailer Release On August 2 Decoding The Poster Trailer May Release Midnight
Photo Credit:

படத்தில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த மல்டி ஸ்டார்கள் நடித்துள்ளதால் படம் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், இந்த படம் ரூபாய் ஆயிரம் கோடி வசூல் குவிக்கும் எனவும், ஆயிரம் கோடி ரூபாய் வசூல் குவிக்கும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை இந்த படம் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைலர் - இசை: படத்தில் இருந்து இதுவரை மொத்தம் மூன்று பாடல்கள், வெளியிடப்பட்டுள்ளது. இதில் மூன்று பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், மோனிகா பாடலுக்கு உலக அளவில் கவனம் பெற்றது. படத்தை ஒரே இரவில் உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று விட்டது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

Rajinikanth Coolie Trailer Release On August 2 Decoding The Poster Trailer May Release Midnight
Photo Credit:

நள்ளிரவில் டிரைலர்: அதேபோல் ஆகஸ்ட் 2ஆம் தேதி டிரைலர் ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பில் நேரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர் வாட்ச் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், படத்தில் நடித்துள்ள அனைவரது புகைப்படமும் உள்ளது. இதில் ரஜினிகாந்த் புகைப்படங்கள் மட்டும் இரண்டு புகைப்படங்கள் உள்ளது. இந்த இரண்டும் கடிகாரத்தில் 12க்கு நேராக உள்ளது. இதனால், பலரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு டிரைலர் ரிலீஸ் ஆகும் என்பதைத்தான் படக்குழு மறைமுகமாக கூறுகிறார்கள் என பேசி வருகிறார்கள்.

வாட்ச் டிசைன்: தற்போது இந்த போஸ்டரும் அறிவிப்பும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆகஸ்ட் 2ஆம் தேதிக்காக ரஜினிகாந்த் ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளார்கள். விலை உயர்ந்த வாட்ச்கள் தொடர்பாகத்தான் கதை மற்றும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் போஸ்டர் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X