1000 கோடி அடிக்கும்னு எதிர்பார்த்தா மட்டும் போதாது?.. கூலி போஸ்டர் கூட காப்பியா?.. மாட்டிக்கிச்சே!

சென்னை: பெரிய நடிகர்களின் படங்கள் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாவதும், அதன் பின்னர் பெரும் அடியை வாங்கி முடங்கிப் போய் விடுகிறது. அதன் பின்னர் படக்குழுவுக்கு மேல் இணையத்தில் ரசிகர்கள் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். இப்படி பல படங்களுக்கு நடந்துள்ளது. இந்த ஆண்டில் அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் எல்லாம் அந்த லிஸ்ட் தான்.

இப்படியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படம் ரூபாய் 1000 கோடிகள் வரை வசூல் செய்யும் என படக்குழு நம்புகிறதோ இல்லையோ, தமிழ் திரைத்துறையில் பேச்சுகள் அடிபடுகிறது.

Rajinikanth Coolie Unleashed Fans Trolls With Proof Coolie Posters Copied From Hollywood Films
Photo Credit:

இந்நிலையில் படத்தின் சில போஸ்டர்கள் மற்றும் அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் அப்செட்டை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஆங்கில திரைப்படத்தின் போஸ்டர்களை பார்த்து அப்படியே அட்டை காப்பி அடித்துள்ளார்கள் என கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

போஸ்டர்கள்: அதாவது இது தொடர்பாக இணையவாசிகள், எனக்கு கூலி படத்தின் போஸ்டர்களை பார்த்து கொஞ்சம் கூட ஈர்ப்பு ஏற்படவில்லை. காரணம் அவை ஆங்கிலப் படங்களான MADAME மற்றும் REBEL MOON ஆகிய படங்களின் போஸ்டர்களை பார்த்து அப்படியே காப்பி அடித்து உருவாக்கி உள்ளார்கள். இப்படி அட்டை காப்பி அடிப்பீர்கள் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை" எனவும் விமர்சித்து வருகிறார்கள். போஸ்டர்களே இந்த அளவுக்கு காப்பி அடித்து வெளியிடுகிறார்கள் என்றால், படத்தின் கதை எங்கிருந்து காப்பி அடித்தார்களோ, அதற்கு ரிலீஸ் வரை காத்திருக்க வேண்டுமோ என்று கேட்டு வருகிறார்கள்.

Rajinikanth Coolie Unleashed Fans Trolls With Proof Coolie Posters Copied From Hollywood Films
Photo Credit:

ட்ரோல்: ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான பவர் ஹவுஸ் பாடல், பாப் பாடல் ஒன்றின் இசையைப் போல அப்படியே உள்ளது எனவும் விமர்சிக்கப்பட்டது. இப்படி இருக்கும்போது போஸ்டர்களும் இவ்வாறு ஆங்கிலப் படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதால், காப்பி அடிப்பதில் லோகேஷ் கனராஜ்க்கும் அனிருத்துக்கும் இடையில்தான் போட்டி போல எனவும் ரசிகர்கள் விமர்சித்து வருகிறர்கள். கூலி படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதனால் படத்தின் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. போஸ்டர்களிம் இசையும் இப்படி காப்பி அடிக்கப்பட்டுள்ளதால் படம் ரூபாய் 1000 கோடி வசூல் அடிக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X