கண்ணா இது எப்படி இருக்கு.. தீபாவளிக்கு கூலி.. பொங்கலுக்கு ஜெயிலர் 2.. ஜெட் வேகத்தில் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று அட்டகாசமான வீடியோ காட்சியுடன் வெளியாகி தொடர்ந்து ட்ரெண்டிங்கை தெறிக்க விட்டு வருகிறது. கூலி திரைப்படம் மே மாதம் வெளியாகும் என்றும் ஜூன் மாதம் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தீபாவளி ரிலீஸ் என்கிற தகவல்கள் அடிப்பட தொடங்கியுள்ளன.

இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜயின் ஜனநாயகம் திரைப்படம் வெளியாகாது என்பது திட்டவட்டமாக தெரிந்த நிலையில், தீபாவளி போட்டியில் சிவகார்த்திகேயனின் மதராசி மற்றும் கார்த்தி நடித்த சர்தார் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டன.

Rajinikanth Coolie will release on Diwali this year and Jailer 2 try to catch Pongal 2026 holiday

ஆனால் தற்போது ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானால் மற்ற படங்களில் ரிலீஸ் தள்ளிப் போகும் அல்லது முன்பாகவே வெளியாகும் சூழல் உருவாகி இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தீபாவளிக்கு கூலி: மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே அந்த தேதியை சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் புக் செய்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் குட் பேட் அக்னி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகியுள்ள நிலையில், தனுஷின் இட்லி கடை திரைப்படம் ரிலீஸ் தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Take a Poll

கூலி படப்பிடிப்பு ஓவர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமீர்கான், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் செளபின் சாஹிர், கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ஒரே ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே என பெரிய காஸ்டிங்கை வைத்து எடுக்கப்பட்ட கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி லோகேஷ் கனகராஜ் முடித்து கொடுத்துள்ளார்.

தெறிக்கும் டிரெண்டிங்: அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் சில மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்பதால் கூலி திரைப்படம் கண்டிப்பாக தீபாவளி வெளியீடாக வரும் என ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர். இந்த தீபாவளி தலைவர் தீபாவளி தான் என்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கூலி ஹாஷ்டேக்கை ரஜினிகாந்த் ரசிகர்கள் இரண்டு செய்து வருகின்றனர்.

Rajinikanth Coolie will release on Diwali this year and Jailer 2 try to catch Pongal 2026 holiday

ஜெயிலர் 2 பொங்கல்: தீபாவளிக்கு ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ் ஆக பொங்கலுக்கு ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகும் என்றும் விரைவில் அதன் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளார் என்றும் கூறுகின்றனர்.

விஜய்யுடன் மோதல்?: அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள ஜனநாயகம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி திரைப்படமும் பொங்கல் போட்டியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ரஜினிகாந்தின் ஜெய்லர் 2 திரைப்படம் பொங்கல் பண்டிகையை குறி வைப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால், கண்டிப்பாக இப்படி ஒரு பெரிய மோதல் தமிழ் சினிமாவில் நடைபெறாது என்றும் ஜெயிலர் 2 திரைப்படம் சம்மர் ரிலீஸ் ஆக மாறும் என்றும் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி: 74 வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுப்பது போல அதிரடி காட்டி நடித்து வருவதை பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த டபுள் தமாக்கா அப்டேட் ரொம்பவே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இயக்குனர் நெல்சன் எவ்வளவு விரைவாக ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்கிறார் என்பதில் தான் அடுத்த ஆண்டு பொங்கல் போட்டி சூடு பிடிக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X