பாட்ஷா பட பாட்டுக்கு ரஜினிகாந்த் மேடையில் டான்ஸ் ஆடி பார்த்து இருக்கீங்களா? இதோ இங்க பாருங்க!

சென்னை: தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகராக மாஸ் காட்டி 70 வயதிலும் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வரும் ரஜினிகாந்த் பாட்ஷா பட பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.

ரஜினிகாந்தின் பட பாடலுக்கு பல முன்னணி நடிகர்கள் டான்ஸ் ஆடி பார்த்து இருப்பீங்க.. ஆனால், ரஜினிகாந்தே விழா மேடையில் டான்ஸ் ஆடி பார்த்து இருக்கீங்களா? சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் நடனமாடிய வீடியோ டிஜிட்டல் மாஸ்டரின்க் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

ஆன் ஸ்க்ரீனில் மட்டுமல்ல ஆஃப் ஸ்க்ரீனிலும் தான் ஒரு ஸ்டைல் சக்கரவர்த்தி என்பதை ரஜினிகாந்த் இந்த வீடியோவில் நிரூபித்து உள்ளார்.

வசூல் வேட்டையன்

வசூல் வேட்டையன்

தமிழ் சினிமாவில் இதுவரை 500 கோடிக்கும் அதிகமாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்திருக்கிறார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான். மன்னன், எஜமான், பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், கபாலி, 2.0 என பல மெகா பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினி பேசினாலே

ரஜினி பேசினாலே

சினிமா பட விழாக்களில் ரஜினிகாந்த் பேசினால் போதும் ரசிகர்கள் பெரிய கூட்டமாக அரங்குகளை அதிரவைத்து விடுவார்கள். இந்நிலையில், ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடி உள்ள வீடியோ ரீ மாஸ்டரிங் செய்யப்பட்டு யூடியூப் பக்கத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

செம ஸ்டைலாக டான்ஸ்

செம ஸ்டைலாக டான்ஸ்

நடிகர் ரஜினிகாந்த் 1995 ம் வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மேடையில் தோன்றி பல பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார். அதன் பின் சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு, ரசிக பெருமக்களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்ற நிறுவனமான NOISE AND GRAINS , அந்த பாடல்களை தொடர்ந்து வெளியிட முடிவு செய்து,இந்த பதிவுகளை நவீன டிஜிட்டல் மாஸ்டரிங் முறையில், ஒளி கலவை செய்து வெளியிட்டு வருகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் ஆஃப் ஸ்க்ரீனிலும் அதே ஸ்டைலாக கெத்தாக நடனம் ஆடும் வீடியோவை டிஜிட்டல் வடிவத்தில் ரசிகர்கள் யூடியூபில் பார்க்க கிடைத்ததை கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்தின் இதுபோன்ற அரிதான த்ரோபேக் வீடியோக்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X