பார்ட்டியில் செம ஆட்டம் போடும் ரஜினிகாந்த்... தீயாய் பரவும் வீடியோ.. குவியும் லைக்ஸ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பார்ட்டி ஒன்றில் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக தர்பார் படம் வெளியானது. இதில் ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

20 சதவீத காட்சிகள்
இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் படமாக்கப்பட்டது. இன்னும் 20 சதவீத காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

ஆரத்தி எடுத்த லதா
கொரோனா பரவல் காரணமாக பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படப்பிடிப்பை முடித்து திரும்பிய ரஜினிக்கு அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்த வீடியோக்கள் வைரலானது.
Recommended Video

பார்ட்டியில் டான்ஸ்
அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் வாக்கிங் போன வீடியோக்களும் வைரலாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பார்ட்டி ஒன்றில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

டான்ஸ் ஆடிய ரஜினி
முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் ரஜினி. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என அனைவரும் டான்ஸ் ஆட அவர்களுடன் சேர்ந்து ரஜினியும் டான்ஸ் ஆடியுள்ளார்.
குவியும் லைக்ஸ்
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த வீடியோ இத்தனை நாட்கள் கண்ணில் படாமல் போய்விட்டதே என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











