லெஜண்ட் இயக்குநருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. பிறந்தநாளை ரஜினி மகள் சூப்பரா கொண்டாடிருக்காங்களே!
சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா; நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பத்து வருடங்களுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்த அவர்கள்; தங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக சில வருடங்களுக்கு முன்பு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள். இதற்கிடையே சில படங்களை இயக்கிய அவர்; பெரிய வெற்றி எதையும் பெற முடியவில்லை. இந்நிலையில் நேற்று அவர் தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. காதல் கொண்டேன் திரைப்படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து பாராட்டும்போது அவர்கள் இரண்டு பேரும் முதன்முறையாக பழகினார்கள். அப்போதிருந்து சில காலம் நண்பர்களாக பழகிய அவர்கள்; காதலிக்கவும் செய்தார்கள். இந்தக் காதலுக்கு முதலில் ரஜினியின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் தான் செய்யும் காதலில் மகள் உறுதியாக இருப்பதை பார்த்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார்.
ஃபேவரைட் ஜோடி: தனுஷும் ஐஸ்வர்யாவும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்தார்கள். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷின் நடை, உடை, பாவனை என அத்தனையையும் ஐஸ்வர்யாதான் மாற்றி வைத்தார். தனுஷும் தன்னுடைய மனைவியின் இயக்குநர் ஆகும் ஆசைக்கு முட்டுக்கட்டை போடாமல் தன்னால் முடிந்த சப்போர்ட்டை செய்தார். அந்தவகையில் 3 படத்தை முதன்முறையாக இயக்கினார் ஐஸ்வர்யா.

அடுத்தடுத்த படங்கள்: அப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. அதேசமயம் தனுஷின் நடிப்பு, அதில் பேசப்பட்டிருந்த பைபோலார் டிஸ் ஆர்டர் நோய் உள்ளிட்டவைகள் வரவேற்பை பெற்று விமர்சகர்களால் ஓரளவு கொண்டாடப்பட்டது. அந்தப் படத்துக்கு பிறகு கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக் உள்ளிட்டோரை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். அதுவும் தோல்விதான். அப்படியே காலங்கள் ஓடிய சூழலில்; தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று சில வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டார்கள்.
ட்ரோல் செய்த ரசிகர்கள்: டைவர்ஸுக்கு பிறகு விக்ராந்த், விஷ்ணு விஷாலை லீடு ரோலில் வைத்து; ரஜினியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து லால் சலாம் படத்தை இயக்கினார். ஆனால் இதுவும் தோல்விதான். படத்தின் ஹார்டு டிஸ்க்கை காணவில்லை என ரிலீஸ் சமயத்தில் ஐஸ்வர்யா சொன்னதை ரசிகர்கள் கடுமையான ட்ரோல் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. தியேட்டரில் அடி வாங்கினாலும்; ஓடிடியில் ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே பெற்றது.
இயக்குநர் பாலாவுடன்: அடுத்ததாக ஒரு படத்துக்கு கதை எழுதும் பணியில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் நேற்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அப்போது அங்கு இயக்குநர் பாலாவும் வர; இரண்டு பேரும் சேர்ந்து சாமி தரிசனம் செய்தார்கள். அதுதொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











