Aishwarya: ஓம் நமச்சிவாய.. ஐஸ்வர்யாவிற்கு என்ன ஆச்சு இப்படி மாறிவிட்டாரே!

சென்னை: 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா கடைசியாக லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீடு ரோலில் நடிக்க ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் வருத்தத்தில் இருக்கும் ஐஸ்வர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருடன் சேர்ந்து வாழ்ந்த காலகட்டத்தில் 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். அந்தப் படமும் தோல்வியையே சந்தித்தது. சூழல் இப்படி இருக்க தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்து பெறுவதாக இருந்த இவர்கள் குழந்தைகளுக்காக இன்னும் சட்டப்பூர்வமாக பிரியவில்லை.

Rajinikanth daughter Aishwarya rajinikanth post pics on instagram

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இதனால், மன அழுத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா அதில் இருந்து விடுபட முதலில் பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கினார். அந்த பாடலுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, லால் சலாம் படத்தை இயக்க முடிவு செய்தார். லைகா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு ரோலில் நடித்திருக்க, ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அவர் மொய்தீன் பாய் என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். கெஸ்ட் ரோல் என்று சொன்னாலும் படத்தில் ஒரு மணி நேரம் வரை அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

லால் சலாம் தோல்வி: ரஜினிகாந்த்தின் படமாக இதனை படக்குழு ப்ரோமோட் செய்யாவிட்டாலும் பெரும் எதிர்பார்ப்பு வைத்து ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். ஆனால் லால் சலாம் படம் ரசிகர்களை திருப்திப்படுத்த வில்லை. முக்கியமாக ஐஸ்வர்யாவின் மேக்கிங், திரைக்கதை என எதுவுமே எடுபடவில்லை என்று ரசிகர்கள் ஓபனாகவே விமர்சனத்தை முன்வைத்தனர். இதனால் படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலத்த அடி வாங்கிவிட்டது.

இதுதான் காரணம்: படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டது, மீண்டும் அந்த காட்சியை எடுக்க முயற்சி செய்தோம், ஆனால், அனைவரின் கேட்டப்பும் மாறிவிட்டதால், அந்த காட்சியை மீண்டும் எடுக்க முடியாமல் போய்விட்டது, இதனால், இருந்த காட்சியை வைத்து படத்தை முடித்தோம் என்றும் ஐஸ்வர்யான விளக்கம் கொடுத்தார். அவர் என்னத்தான் விளக்கம் கொடுத்தாலும், ரஜினிகாந்தின் பெயரை கொடுத்துவிட்டாரே என ரசிகர்கள் அவர் மீது கோவத்தில் உள்ளனர்.

ஓம் நமச்சிவாய: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓம் நமச்சிவாய, திருப்பதி,காசிக்கு சென்ற போட்டோ, பானிப்பூரி சாப்பிட்டது, ஜிம்மில் ஓர்க் அவுட் செய்த போட்டோக்களை போட்டு மார்ச் மாதம் இப்படித்தான் போச்சு என பதிவிட்டுள்ளார். அந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள் ரஜினி பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையாக கோவில் கோவிலா போகிறாரே என தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X