Aishwarya: தனியா இருக்கணும்.. வாழ்க்கையின் பிலாசபியே அதுதான்.. வேதனையில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
சென்னை: காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரமாக நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டன. இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகப்பெரிய அதிர்ச்சியை படுத்தியது. தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்க்கையின் தத்துவம் குறித்து வேதனை உடன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, திருடா திருடி என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்தார் தனுஷ். காதல் கொண்டேன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற போது, ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனுசுக்கு பூங்கொத்து வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதன் பிறகுதான் இருவருக்கும் இடையே அது காதலாக மாறியது. இதையடுத்து, 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் திருமணம் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருந்த நிலையில் 2022ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக இணையத்தில் இருவரும் ஒன்றுபோல அறிக்கை வெளியிட்டு விட்டு பிரிந்தனர்.

அந்த அறிவிப்புக்கு பின் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா இவர்களின் பிரிவு நிரந்தரமில்லை என்றும் இவர்கள் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கூறியிருந்தார். அதேபோல ரஜினிகாந்த் அவர்களும் இவர்கள் இருவரை சேர்த்து வைப்பதற்கான பல கட்ட முயற்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. அது உண்மை என்பது போல ஐஸ்வர்யாவும் தனுஷூம் மகன்களுக்காக அடிக்கடி சந்தித்து கொண்டதாக செய்திகள் வெளியானது.
ஆனால் இந்த செய்தியை பொய்யாக்கும் வகையில் இவர்கள் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரமாக பிரிவதாக விவகாரத்துக்கு வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்கு இவர்கள் மூன்று முறை ஆஜராகாமல் இருந்தனர். இயைதடுத்து,கடைசியாக இவர்கள் ஆஜரானதை தொடர்ந்து இவர்களுக்கு நீதிமன்றம் விவகாரத்துக்கு வழங்கி உத்தரவிட்டது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் கவலையை ஏற்படுத்தியது. இவர்களின் பிரிவுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் குழந்தைகளுக்காக இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்த்து இருக்கலாம் என பலர் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
வாழ்க்கையின் தத்துவம்: இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் தற்போதுவைரலாகி வருகிறது, அதில் வாழ்க்கையின் பிலாசபி என்ன என்பதை கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்டேன். தனிமை எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக இருக்கிறது. அந்த தனிமையை அதை நான் விரும்புகிறேன். அதுமட்டுமல்லாமல், நான் புரிந்து கொண்ட மற்றொரு விஷயம் என்னவென்றால் தனிமையில் இருக்கும் ஒருவர்தான் வாழ்க்கையில் மிகவும் பாதுகாப்பான நபராக இருக்கிறார். இதனால், நான் தனியாக இருப்பதை கம்ஃபர்ட்டபலாக உணர்கிறேன். சிலர் என்னிடம் Bore அடித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். முதலில் எனக்கு bore எப்போதும் அடித்ததே இல்லை. bore என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. இப்போது வரைக்கும் bore அடித்தது கிடையாது இதனால் எனக்கு அந்த ஃபீலிங்கே வந்தது இல்லை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











