ECRல் பிரம்மாண்ட வீடு கட்டும் ரஜினியின் இளைய மகள்..மகிழ்ச்சியில் ரஜினிகாந்த்!
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஈசிஆரில் புதிய வீடு ஒன்றை கட்ட பூமி பூஜை போட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கோடிக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இளையமகளான சவுந்தர்யா, பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான அஷ்வின் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு வேத் என்ற மகன் உள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த்
இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திடீரென தனது காதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். மகனை தன்னுடன் வளர்த்து வந்த சவுந்தர்யா கடந்த பிப்ரவரி மாதம் தொழிலதிபரும் அரசியல் பிரமுகருமான விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். சவுந்தர்யாவிற்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய மகனுக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் வைத்துள்ளார்.

ஈசிஆர்-ல் புதிய வீடு
இந்நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய வீடு கட்ட பூமி பூஜை நடத்தியுள்ளார். இந்த பூஜையில், ரஜினிகாந்தும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடு ஈசிஆர்-ல் கட்டப்பட உள்ளது. மிக பிரமாண்டமாக இந்த வீட்டை சௌந்தர்யா மற்றும் விசாகன் கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா, தனுஷ்
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் பிரிவாக அறிவித்துவிட்டு பிரிந்து இருக்கிறார்கள். ஆனால், இருவரும் குழந்தைகளுக்காக சேர்த்து வாழ முடிவு செய்திருப்பதாகவும், போயஸ்கார்டனில் தனுஷ் கட்டிவரும் பிரம்மாண்டமான வீட்டில் மன கசப்புகளை மறந்து புதிய வாழ்க்கையை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.

ரஜினிகாந்த் மகிழ்ச்சி
இளமை காலத்தில் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வந்த ரஜினிகாந்த், தனது இருமகளுடன் நேரத்தை செலவிட்டது என்பது மிகவும் குறைவுதான். ஆனால், இப்போது, ரஜினியால் தனது பேரக்குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியாது என்பதால், தனது வீட்டுக்கு பக்கத்திலேயே தனது மகளை குடிவைத்துள்ளார்.அடுத்தடுத்து இருமகள்களும் புது வீடு கட்டுவதால் ரஜினிகாந்த் மகிழ்ச்சியில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











