ரஜினி மகளுக்கு விழுந்த அந்த அடி.. இன்னும் மறக்கல.. இப்பவும் புலம்புறாங்களே.. ரொம்ப பாவம்

சென்னை: ரஜினிகாந்த்தின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான கூலி படுதோல்வியை சந்தித்ததை அடுத்து; இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இதனை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 173ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

75 வயதாகும் ரஜினிக்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 15 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகன்கள். சுமூகமாக போய்க்கொண்டிருந்த தனுஷ் - ஐஸ்வர்யா திருமண வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்பிருந்து விரிசல்கள் விழ ஆரம்பித்தன. அந்த விரிசல் நாளடைவில் பெரிதாகி கடந்த வருடத்தில் விவாகரத்தும் கிடைத்துவிட்டது. இது ரஜினிக்கு தீராத மன உளைச்சலை கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இரண்டாவது மகளின் வாழ்க்கை: இதற்கிடையே மூத்த மகள் ஐஸ்வர்யா போன்று இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும் முதலில் திருமண உறவு விவாகரத்தில்தான் முடிந்தது. சில காலம் சிங்கிளாக இருந்த சௌந்தர்யா; நடிகர் விசாகனை காதலிக்க ஆரம்பித்தார். மகளின் சந்தோஷம்தான் பிரதானம் என்று முடிவெடுத்த ரஜினிகாந்த்; விசாகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு சௌந்தர்யாவை திருமணம் செய்துவைத்தார். ரஜினியின் அந்த செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth s Daughter Soundarya Opens Up About Kochadaiiyaan Criticism
Photo Credit:

நிம்மதியான வாழ்க்கை: இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சௌந்தர்யா நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் தனது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்புகூட அவரும், அவரது கணவர் விசாகனும் ஒன்றாக நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் சென்சேஷனல் ஆனது. இரண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறதே என்று வாழ்த்தி எக்கச்சக்க கமெண்ட்டுகள் பறந்தன.

மகள்களின் கரியர்: ரஜினியின் இரண்டு மகள்களுமே சினிமாவில்தான் இருக்கிறார்கள். ஐஸ்வர்யாவை பொறுத்தவரை 3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். அவை அனைத்துமே தோல்வி படங்கள்தான். சௌந்தர்யா கிராஃபிக்ஸ் தொடர்பான படிப்பை முடித்துவிட்டு சில படங்களுக்கு சிஜி பணியாற்றியுள்ளார். மேலும் கோவா படத்தை தயாரித்த அவர்; இப்போது அபிஷந்த் ஜீவிந்த்தை ஹீரோவாக வைத்து வித் லவ் படத்தை தயாரித்துள்ளார். இதற்கிடையே ரஜினி, தீபிகா படுகோனே உள்ளிட்டோரை வைத்து மோஷன் கேப்சர் மூலம் கோச்சடையான் படத்தையும் இயக்கினார்.

இன்னும் புலம்பும் சௌந்தர்யா: ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. ரஜினியை வீணடித்துவிட்டார் என்று கழுவி கழுவி ஊற்றினார்கள் ரசிகர்கள். அது சூப்பர் ஸ்டாரின் கரியரில் மறக்க முடியாத படமாகவும் மாறிவிட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல் நடத்திய விருது வழங்கும் விழாவில் சௌந்தர்யா பேசியது இப்போது திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அவர் பேசுகையில், "கோவா படத்தை தயாரித்த நான் இப்போது அபிஷன் ஜீவிந்த்தை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்கிறேன். கோச்சடையான் படத்தை டெக்னாலஜி இந்த அளவுக்கு இல்லாத காலத்தில் இயக்கினேன். அதற்காக பெரிய விமர்சனங்களையும் சந்தித்தேன். அதெல்லாம் ஒரு பகுதிதானே. எப்போதும் அந்தப் படத்தை நினைத்து எனக்கு பெருமைதான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X