Rajinikanth: தக் லைஃப் வாங்கிய தர்ம அடி.. மணிரத்னம் வீசிய வலையில் இருந்து தப்பித்த ரஜினிகாந்த்!
சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜெயிலர் 2. கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான இரண்டு படங்களும் படுதோல்வி படங்களாக மாறிவிட்டது. இந்த இரண்டு படங்களையும் இயக்கியது தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என கூறப்படும் ஷங்கர் மற்றும் மூத்த இயக்குநர் எனக் கூறப்படும் மணிரத்னம். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து மணிரத்னம் படம் இயக்க திட்டமிட்டதாக தகவல் உலா வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து பணியாற்றிய படம் தளபதி. இந்த படத்தில் இந்த படம் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அதன் பின்னர் இந்த கூட்டணி இணைந்து படம் பண்ணவில்லை. அதேபோல் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான படம் நாயகன். இந்த படத்தின் மூலம் முதன் முதலாக இணைந்த கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி, அதன் பின்னர் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பின்னர் தக் லைஃப் படத்தின் மூலம் இணைந்தார்கள். இந்த படம் ஒரு தோல்விப் படமாக மாறியுள்ளது.

அதேபோல், கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணி முதன் முதலாக இணைந்த படம் இந்தியன். இந்த படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்திற்கு பின்னர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இணைந்து படம் பண்ணாமல் இருந்தனர். இப்படியானவர்கள் மீண்டும் இணைந்த படம், இந்தியன் 2. இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. இவர்கள் கூட்டணியில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியன் படத்தின் சீக்வல் ரிலீஸானதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படுதோல்வி படமாக மாறியது.
சொதப்பல் லெஜண்ட்கள்: மிக நீண்ட வருடங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவின் லெஜண்ட்கள் இணைந்து படம் செய்யுகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தால், லெஜண்ட்கள் இணைந்து எடுக்கும் படமெல்லாம் படு சொதப்பலாகவே உள்ளது. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலேயே மணிரத்னம் ரஜினியைச் சந்தித்து இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று பேசியதாக ஒரு தகவல் சினிமா வட்டாரத்தில் உலா வருகிறது. இதுமட்டுமில்லாமல், தக் லைஃப் படத்தின் விமர்சனங்களை பார்த்த பின்னர் ரஜினிகாந்த் தரப்பில் இப்போதைக்கு மணிரத்னத்துடன் இணைந்து படம் பண்ண வேண்டும், ஜெயிலர் 2 படத்தை முழுவதுமாக முடிக்கலாம் எனவும் அவர் முடிவெடுத்துள்ளதாகவும் ஒரு பேச்சு உலா வருகிறது.

சீனியர்கள்: இந்த தகவல்களை கேள்வி பட்டவர்கள், சினிமாவில் நேற்று நீங்கள் வெற்றியின் உச்சத்தில் கூட இருந்திருக்கலாம், ஆனால் இன்றைக்கு நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம், மணிரத்னத்திற்கு இப்போதைக்கு டைம் சரியில்லை போல அதனால்தான் அவரது கடைசி மூன்று படங்களுக்கு அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என பேசிவருகிறார்கள். அதே நேரத்தில் கமல், ரஜினி, ஷங்கர், மணிரத்னம் என இவர்களுக்கு இருக்கும் அனுபவத்திற்கு சினிமா அறிவுக்கு இன்றைய ரசிகர்களின் ரசனையை மனதில் வைத்து படம் எடுத்தால் அவை தரமான படமாக இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.



Click it and Unblock the Notifications











